Thursday, February 28

கண்டியில் மாடு அறுப்பதற்கான தடை: மீள்பரிசீலனைக்கு றம்ழான் வேண்டுகோள்

Ramlanமாடு அறுப்பதற்கு தடைவிதிக்கப்படும் தீர்மானத்தினை கண்டி மாநகர சபை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்  N.M. றம்ழான்  தெரிவிக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் மார்ச் 15ம் திகதி முதல் கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் மாடுகளை வியாபார்திற்காக அறுப்பதை தடை செய்யும்  தீர்மானம் ஒன்றினை கண்டி மாநகர சபை கடந்த 26ம் திகதி நடைபெற்ற சபைக் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அவ்வாறு நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தினை கண்டி மாநகர சபை மீள் பரிசீலனை செய்ய வேண்டும.;

கண்டி மாநகர சபையின் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாகவும் பெருன்பான்மையின் அடிப்படையில் இத்தீர்மானம் சபையில் எடுக்கப்பட்டிருந்தாலும் உணவுக்காக மாட்டு இறைச்சியினை பயண்படுத்தும் வரி செலுத்தும் வறியிருப்பாளர்களின் நலனையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தினால் உணவுக்காக மாட்டு இறைச்சினைப் பயண்படுத்தும் ஒரு சமூகம் நேரடியாக பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது
எனவே ஒரு உள்ளுராட்சி சபையில் கொண்டுவரப்படும் எந்தத் தீர்மானமானாலும் சரி அது வரி செலுத்தும் வரியிருப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத   வகையில் அமைய வேண்டும் எந்தவொரு உள்ளுராட்சி சபையும் மக்களை பாதிக்கின்ற வகையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது கிடையாது ஆனால் கண்டி மாநகர சபை இவ்விடயத்தில் மேற்கொண்டுள்ள தீர்மானம் தனியே முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில் அமைந்துள்ளது ஆகவே இத்தீர்மனத்தினை மீள் பரிசீலனை செய்து கண்டி மாநகர சபைக்கு வரிசெலுத்தும் முஸ்லிம்களின் நலன் கருதியே இத்தீர்மானத்தினை இல்லாமல் செய்து அவர்களின் நலனை பாதிக்காத வகையில் தீர்மானம் மேற்கொள்வதே பொறுத்தமாகும்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குறித்த தீர்மானம் ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல ஒரு சமூகத்திற்கு எதிரானதாகும் வியாபாரத்திற்காக மாடுகளை அறுப்பதற்கு தடைவிதிக்கும் தீர்மானத்தினால் வியாபாரிகள் மாத்திரமின்றி நுகர்வோர்களும் பாதிக்கப்படுகின்றனர்
இதுவரை காலமும் இல்லாதொரு இத்தீர்மானத்தினை அவசர அவசரமாக முஸ்லிம்களுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் கட்டவிழ்து விடப்பட்டிருக்கும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் கண்டி மாநகர சபை தற்போது நிறைவேற்றிருப்பதன் பின்னனியில் பேரினவாத சக்திகளின் சதித்திட்டம் மறைந்திருக்கலாம் என நான் சந்தேகிக்கின்றேன் இதனால் கண்டி மாநகர சபையின் கீழ் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள்
ஒரு தனிமனிதனுக்கு உணவுக்காக மாட்டு இறைச்சி தேவை என்பதற்காக ஒரு மாட்டை அறுக்க முடியாது அவரது தேவையை வியாபாரத்திற்காக மாடுகளை அறுப்பவர்கள் மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவே குறித்த தீர்மானத்தின் மூலம் ஒரு சமூகத்தின் உரிமை திட்டமிட்ட வகையில் பரிக்கப்பட்டுள்ளது
உள்ளுராட்சி சபைகளின் கட்டளைச்சட்டங்கள் மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது அதனை ஒரு பொரும்பான்மை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்தி சபையின் பொரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றியதானது  ஒரு திட்டமிடப்பட்ட அநிதியாகும்
எனவே இத்தீர்மானத்தினை எந்தவொரு சமூகத்தையும் பாதிக்கப்படாத வகையில் மீள் பரிசீலனை செய்யவதே பொறுத்தமானதாகும் எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment