Thursday, June 28

சவூதி அரேபியாவில் புத்தரை வழிபட சுதந்திரம் இல்லை - ரஞ்சன் ராமநாயக்க எம்.பி.

அரேபியாவில் தொழில்புரிந்து வரும் இலங்கை தொழிலாளர்கள் தமது மத வழிப்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கையை சேர்ந்த தொழிலாளரி ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வழிப்பட்டு கொண்டிருந்த போது, அங்கு சென்ற சவூதி காவற்துறையினர், அவரை கொடூரமான முறையில் கைதுசெய்து, இடையூறு செய்துள்ளனர். சவூதியில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும், இந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து ராமநாயக்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த பிரேமநான் துங்கசிறி தன்னிடம் இருந்து புத்தர் சிலையை வழிப்பட்டுள்ளார். அப்போது அங்கு சென்ற உமுல்ஹமாம் காவற்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் இது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையரின் உயர் எந்த நேரத்திலேனும் அழிக்கப்படக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் சவூதியில் உள்ள அப்பாவி இலங்கை தொழிலாளர்கள் தமது மதத்தை அனுஷ்டிக்க முடியாத நிலைமையில் உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமிய நாடான சவூதியில், ஷரியா சட்டத்தின் படி சிலை வணக்கத்தில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment