Friday, December 30

அரச சேவையில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை: ஜனாதிபதி மகிந்த


வெள்ளிக்கிழமை, 30 டிசெம்பர் 2011
அரச சேவையில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை உடனடியாக உள்வாங்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நிர்வாக சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை தெளிவுபடுத்துவதற்காக அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவைக்கு புதிதாக 296 இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர் கட்சி பேதங்களின்றி, குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்குள் மக்கள் எதிர்பார்க்கின்ற சேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு நிருவாக சேவை ஊழியர்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அரச கொள்கைகளுக்கமைய வருடந்தோறும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment