Monday, December 12

அத்தியாவசியப் பொருட்களின் விலை அடுத்த மாதம் அதிரிக்கும்?




ரூபாவின் மதிப்பு குறைவடைந்ததையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் ஜனவரி முதல் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அரிசி, மா, சீனி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் முழுமையாக கையிருப்பில் உள்ளதாக பழைய சோனகத் தெரு வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கே. பழனியாண்டி சண்டே டைம்ஸுக்குத் தெரிவித்தார்.
நத்தார் மற்றும் புதுவருடக் காலத்தில் வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய விலை நீடித்திருக்கும். ஆனால் இப்பொருட்களை வாங்குவதற்கு புதிய கட்டளைகள் கொடுக்கப்படும்போது, விலை அதிகரிப்பு ஏற்படும் என பழனியாண்டி தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு தவிர்க்கப்பட முடியாத ஒரு பொருளாக பால் மா இருககும் என வர்த்தக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதுவரை பால் மா விலை அதிகரிப்பை நுகர்வோர் அதிகார சபை தடுத்து வந்தது.
எனினும் உயர்ந்த விலைக்கு பால்மாவை இறக்குமதி செய்து இப்போதைய விலைக்கு விற்பனை செய்வது சாத்தியமில்லை என  முன்னிலை இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்களும் இதேபோன்ற பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.
ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்காக, ரூபாவின் பெறுமதியை மூன்று சதவீதத்தினால் கடந்தமாதம் அரசாங்கம் குறைத்தது. (சண்டே டைம்ஸ்)

No comments:

Post a Comment