Friday, December 2

பாதாள உலகக் குழுத் தலைவர் ஜலீல் மொஹமட் பெரோஸ் கடத்தப்பட்டார்


பாதாள உலகக் குழுத் தலைவர் மொஹமட் ஜலீல் மொஹமட் பெரோஸ் எனப்படும் பெரோஸ் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரோஸ் நேற்று வியாழக்கிழமை நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்துக்கும் மேற்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் பெரோஸிற்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
தனது அடியாட்களுடன் செல்லும் போதே பெரோஸ் கடத்தப்பட்டுள்ளார். எனினும் பெரோஸிடன் இருந்த அடியாட்கள் எவரும் கடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இனந்தெரியாதவர்களினால் தமது மகன் கடத்திச் செல்லப்பட்டதாக பெரோஸின் தயார் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 
இதற்கு முன்னர் பல தடவைகள் பெரோஸை பொலிஸார் கைது செய்த போதிலும், அரசியல் செல்வாக்கு காரணமாக விடுவிக்கப்பட்டார். 
சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெரோஸ் செயற்கை கால் ஒன்றைப் பொருத்திக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்பதும் அண்மைக்காலமாக முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. காலை இழந்தும் திருந்தாத ஜென்மம். இருந்தென்ன லாபம்

    ReplyDelete