Thursday, July 28

இரவு 7.30 முதல் 9 மணிவரை நாடகங்களை ஒளிபரப்பாதிருக்குமாறு தொலைக்காட்சிகள் கோரப்படும்



இரவு 7.30 மணிமுதல் 9.00 மணிவரை தொலைக்காட்சிகளில் நாடகங்களை ஒளிபரப்பாதிருக்குமாறு தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் அமைச்சரவை கோரிக்கை விடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலம், பாடசாலை மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தினார். இதற்காக, நாட்டில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் கூட்டுக் கோரிக்கையொன்றை அமைச்சரவை விடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் கருத்துத் தெரிவித்த நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தொலைக்காட்சி நாடகங்களுக்குப் பதிலாக அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் மேற்படி ஒன்றரை மணித்தியாலங்களில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கூறினார்.
அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி, அப்படியானால் வயதானவர்கள்கூட தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிடுவர் என சிரித்துக்கொண்டே கூறினாராம்.

No comments:

Post a Comment