Thursday, June 30

சூரிய சக்தியில் இயங்கும் மடிக்கணணிகள் விரைவில் அறிமுகம்


laptop11
29-06-2011: தற்போதைய சூழலில் மின்சக்தி மற்றும் எரிபொருள் சக்தி என்பவற்றுக்கு பதிலாக இயற்கை சக்திகளை பயன்படுத்தி தொழில்நுட்ப சாதனங்களை இயக்குவதற்கான ஆராய்சி மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பெரும் நிறுவனமான சாம்சுங் நிறுவனம் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மடிக்கணணிகளை ஜூலை மாதத்தில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது NET BOOK NC215S என்ற பெயரில் வெளியிடவுள்ளது.


இதன் திரை 10.1 அங்குல அளவுடையது. மேலும் 1GB அளவு RAM MEMORY. இன்டெல் ATOM N570 DUAL CORE செயலியை கொண்டது. வன்தட்டின் கொள்ளளவு 250GB மற்றும் 320GB ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பற்றரி மூலம் 14 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பாவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 செல் சூரிய சக்தியை சேமிக்கும் பற்றரிகள் உள்ளன. அத்துடன் USB போர்ட் வெப்காம் மற்றும் போன்ற வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

No comments:

Post a Comment