Wednesday, June 22

தெஹிவளை பாத்தியா மாவத்தை மஸ்ஜித் விவகாரம்


கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் விவகாரத்தை தெஹிவளை பெரியபள்ளி நிர்வாகம் கையாண்டு வருகின்றது, சமந்தப்பட்டவர்களுடன் பேசுவதுடன் அரசியல் வாதிகளுடனும் இது தொடர்பாக பேசிவருகின்றது தற்போது ஜமாஅத் தொழுகை நிறுத்தபட்டுள்ள நிலையில் கூட்டு தொழுகை இன்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுது வருமாறு கேட்கப்பட்டுள்ளனர் .

குறித்த மஸ்ஜித் நிர்வாகமும் மற்றும் தெஹிவளை கல்போவில பெரிய பள்ளி நிர்வாகமும் கூட்டு தொழுகை இன்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுது வருமாறு  கேட்டுள்ளது என்றும் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக தற்போது பகல் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதனால் தொழும்போது தாக்கப்படுவோம் என்ற அச்சம் இன்றி தனியாக தொழுது வருவதாகவும் அந்த மஸ்ஜிதின் தினமும் தொழுகையில் ஈடுபட்டுவரும் முஹமத் lankamuslim.org க்கு தெரிவிக்கின்றார் விரிவாக
பாத்தியா மாவத்தையில் கடந்த பத்து வருடங்களாக இயங்கிவந்த அல் பௌசுல் அக்பர் மதரஸா என்ற மாலை நேர சிறுவர் அரபு பாடசாலை அதன் பின் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட மஸ்ஜித் ஒன்றுடன் மஸ்ஜித்தாக இயங்கிவந்தபோது அந்த மஸ்ஜிதில் நுழைந்த பெளத்த மதகுருமார்கள் சிலர் அதனை மூடிவிடுமாறு அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் அதை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் நிலை காரணமாகவும் மஸ்ஜித் கடந்த ஞாயிற்று கிழமையுடன் ஜமாஅத் தொழுகைகள் நடைபெறாது மூடப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment