Sunday, June 26

வட்டியிலும் இலங்கை சாதனை -ஹம்பாந்தோட்டை துறைமுக கடனுக்காக 1110 கோடி ரூபா வட்டி


ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்கு இலங்கை அரசாங்கம் 111.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை  அதாவது சுமார் 11.1 பில்லியன் (1110 கோடி) ரூபா வட்டியாக செலுத்த வேண்டியிருப்பதாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.


இத்திட்டத்திற்கான மொத்த செலவு 360 மில்லியன் டொலர்களாகும்.  இவற்றில் 54 மில்லியன் டொலர்கள் மாத்திரம் துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை சீனாவின் நுஓ-ஐஆ வங்கியிடமிருந்து பெறப்பட்டது.
இதற்காக வட்டியுடன் சேர்த்து அரசாங்கம் 418.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை 31.12.2022 வரை 11 தவனைகளில் மேற்படி சீன வங்கிக்கு செலுத்த வேண்டும். அடுத்த வருடம் முதல் பணம் திருப்பிக்கொடுக்கப்படும். முதலாவது தவணை கொடுப்பனவு 46.81 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  இரண்hவது கொடுப்பனவு 45.05 மில்லியன் டொலர்கள். 3 ஆவது கொடுப்பனவு 43.29 மில்லியன் டொலர்கள். 10 ஆவது கொடுப்பனவு 29.23 மில்;லியன் டொலர்கள்.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலாக இவ்விபரங்கள் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டன.-தமிழ் மிரர் 

No comments:

Post a Comment