Tuesday, May 24

இலங்கையில் சல்மான் ருஸ்தியின் நடுநிசி சிறுவர்கள் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது


சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை இலங்கையில் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டது இதற்கு ஈரானின் தலையீடு இருந்ததாக இயக்குனர் தீபா மேத்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்தவை தொடர்பு கொண்ட போது அவர் இரு தரப்பு விடையங்களையும் கேட்ட பின்னர் படப்பிடிப்பை தொடருமாறு கோரியதாகவும் தற்போது படமாக்கும் வேலைகள் இலங்கையில் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகளை ஆதாரம் காட்டி இலங்கையில் ஆங்கில செய்திகள் வெளியாகியுள்ளன படமாக்கல் நிறைவு பெற்றுள்ளதை இலங்கையில் இந்த படம் தயாரிப்புக்கு பொறுப்பான தி பிலிம் டீம் பிரைவட் லிமிட்டட் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன விரிவாக

இந்த படத்தை சர்வதேச விற்பனை முகவரான FilmNation கம்பெனி அனுசரணையில் கனடாவில் பிரஜா உரிமை பெற்றுள்ள இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும் சல்மான் ருஸ்தியும் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவருவதாகவும் பல இந்திய நடிகர்கள் ஷ்ரியா சரண் ,சீமா பிஸ்வாஸ், ஷாபானா அஸ்மி ,சித்தார்த் சூரியநாராயண் ஆகியோர் பங்கு கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மனித சமுகத்துக்கு இறுதி தூதுவராக அனுப்பப்பட்ட இறைவனின் இறுதி தூதரையும் இஸ்லாத்தையும் அறிவுக்கு புரம்பான கற்பனைகளை அடிப்படையாக கொண்டு தனது விமர்சனங்கள் என்ற பெயரில் கற்பனை குப்பைகளை உலகிற்கு வழங்கிய சல்மான் ருஸ்தி எழுதிய மற்றுமொரு கதைதான் நடுநிசி சிறுவர்கள் Midnight’s Children- என்ற கதையை படமாக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

1990 களில் BBC நிறுவனம் இந்த கதையை தான் ஐந்து குறுந்தொடர்களாக படமாக்க முயற்சிகளை மேற்கொண்டது இந்த படமாக்கும் வேலையை இலங்கையில் அனுமதி பெற்று தொடங்கிய நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் படமாக்க வழங்கப்பட்ட அனுமதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்தினால் மீள பெறப்பட்டது இதை தொடர்ந்து BBC நிறுவனம் அந்த படமாக்கல் முயற்சியை கைவிட்டது

No comments:

Post a Comment