Monday, May 30

மக்கள் தமது தாய் மொழிகளில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை இனிமேல் பூர்த்தி செய்யமுடியும்..


  on Monday, May 30, 2011

கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்களைத் தாய் மொழியில் பூர்த்தி செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான பணிப்புரைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் நாடாளுமன்ற விவகாரச் செயலாளர் டபிள்யூ. கெ.விலகொட தெரிவித்துள்ளார்.கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கட்டாய நிலைமை இருந்தது.

இதனைக் கருத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்து அந்தப் படிவங்களை மக்கள் தமது தாய் மொழியில் பூர்த்தி செய்வதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். எனவே, மக்கள் தமது தாய் மொழிகளில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை இனிமேல் பூர்த்தி செய்யமுடியும். 

அத்துடன் பயணிகள் விமான நிலையங்களில் பூர்த்திசெய்ய வேண்டிய படிவங்களையும் தனித் தாய் மொழியில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment