Wednesday, May 11

பலஸ்தீன அமைப்புகள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளது

பலஸ்தீன அமைப்புகள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளது


May 06, 2011.... jaleel
பலஸ்தீன போராளிகள் அமைப்புகள் மத்தியில் நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்துயிடப்பட்டுள்ளது இந்த ஒப்பந்தம் எகிப்தின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்றுள்ளது அந்த நல்லிணக்க ஒப்பந்தத்தில் ஹமாஸ், அப்பாசின் பி.எல்.ஒ மற்றும் இஸ்லாமிய ஜிஹாத், பலஸ்தீன் போராட்ட முன்னனி ஆகிய அமைப்புக்கள் நேற்று முன் தினம் கையெழுத்திட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாக தேர்தல் திட்டமிடல், பி.எல்.ஒ சீர்திருத்தம், காஸாவிலும், மேற்குகரையிலும் பாதுகாப்பு விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியன இக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்புகளாகும்.

இந்த ஒப்பந்தத்தின் பின்னர் எகிப்து புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாடிய ஹமாஸ் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஷ்எல் புதிய அரபுலகின் யுகம் பிறந்து விட்டது என்று இந்த ஒப்பந்தத்தை வர்ணித்துள்ளார். பலஸ்தீன் மக்களின் தீர்மானத்தை உலகம் மதிப்புடன் கண்காணிக்க வேண்டும் எனவும் தங்களின் பொது எதிரி இஸ்ரேல் எனவும் காலித் மிஷ்எல் தெரிவித்துள்ளார் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது.

No comments:

Post a Comment