Friday, December 30

அரச சேவையில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை: ஜனாதிபதி மகிந்த


வெள்ளிக்கிழமை, 30 டிசெம்பர் 2011
அரச சேவையில் பதினைந்தாயிரம் பட்டதாரிகளை உடனடியாக உள்வாங்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நிர்வாக சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை தெளிவுபடுத்துவதற்காக அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவைக்கு புதிதாக 296 இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எண்ணெய்க் கப்பல்களை ஈரான் மறித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமெரிக்கா எச்சரிக்கை



ஹோர்முஸ் நீரிணையை மூடப் போவதாக ஈரான் அறிவித்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேலும் விதித்தால் வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியது:

நாம் இஹ்வான்களுக்கே வாக்களித்தோம், அவர்களே மிகுந்த புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையுமுடையவர்கள் - பாதிரியார் மகார் பௌசி


Father Maher Fowziஎகிப்தின் அலக்ஸாந்திரியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இஹ்வான்களின் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேற்பாளர்களுக்கே வாக்களித்தனர். அவர்களை நாங்கள் புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் மிக்கவர்களாகவே காண்கின்றோம் என அலக்ஸாந்திரியா கிறிஸ்தவ ஆலயத்தின் ஆயர் பாதிரியார் மகார் பௌசி தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை பரப்புகின்றதாக அமெரிக்கா ?: சாவிஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றதா என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவரைத் தவிர பரகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் அதிகம் பார்வையிட்ட தளங்களின் வரிசையில் google மற்றும் facebook முன்னிலையில்…

google-vs-facebook
2011 இல் அதிகம் பார்வையிட்ட தளமாக google முதன்நிலை வகிகின்றது . இருப்பினும் சமூக இணையதளங்கள் வரிசையில் facebook தன து முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது





சவுதிஅரேபியாவுக்கு ஈரான் அச்சுறுத்தலாம் - அமெரிக்கா போர் விமானங்கள் வழங்குகிறது



சவுதிஅரேபியாவுக்கு அமெரிக்கா போர் விமானங்களை விற்கிறது. சவுதிஅரேபியாவுக்கு அதன் அண்டை நாடான ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது. அதற்காக தனது நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது.

இந்த நிலையில் போர் விமானங்களை வாங்குவது குறித்து கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி சவுதி அரேபியாவுக்கு 84 போயிங் எப்-15 ரக போர் விமானங்களும், மற்றும் 70 அதிநவீன போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்குகிறது. மேலும் ஹெலி காப்டர்கள், ஏவுகணைகள், வெடி குண்டுகளும் வழங்கப்பட உள்ளன. அவற்றின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி.

இதற்கான அதிகாரப் பூர்வ தகவல் ஹவாயில் இருந்து நேற்று வெளியிடப்பட்டது. தற்போது அங்குதான் அதிபர் ஒபாமா விடுமுறையை கழித்து வருகிறார்.

பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தகர் கோடாரியினால் வெட்டிக்கொலை

 


பாணந்துறை கொறக்கானை என்ற இடத்தில் வர்த்தகர் ஒருவர் கோடரியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதையுடைய முகம்மது சித்தீக் என்பவர் என பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமியொருவர் 7 வருடங்களின் பின் பெற்றோர்களிடம் வந்து சேர்ந்தார்...

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமியொருவர் 7 வருடங்களின் பின் தன்னுடைய பெற்றோரைத் தேடி வீடு வந்து சேர்ந்துள்ள சம்பவமொன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
 

2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது தான் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு வேறு ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தததாகவும். தனக்கு தேவையான சகல வசதிகளையும் தன்னை பராமரித்தவர்கள் செய்து தந்ததாகவும்இ தன்னுடைய பெற்றோரை பார்க்க விரும்புவதாக தான் கூறிய போது அது சம்பந்தமான விடயங்களை அறிவதில் மிகவும் அக்கரை எடுத்து இன்று என்னை பெற்றவர்களை வந்தடைந்ததனை இட்டு இறைவனுக்கும் எனக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக 15 வயது நிரம்பி மேரி யுலந்தா தெரிவித்தார்.

Thursday, December 29

தனியார் பல்கலை சட்டமூலம் நிச்சயம் வரும் என்று அமைச்சர் எஸ்.பி. சவால்; இலவசக் கல்விக்கு ஆப்பு வைக்க அனுமதிக்க முடியாது என்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ச!

Vimal_Veeravansa(அய்யாஷ்)
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் தனியார் பல்கலைக்கழக சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மாணவர் அமைப்புகளுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சவால் விடுத்திருக்கும் நிலையில் அச்சட்டமூலம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டக் கல்லூரிக்கு 51 முஸ்லிம் மாணவர்கள் அனுமதிபெற்று மகத்தான சாதனை

 



இலங்கை சட்டக் கல்லூரி வரலாற்றில் இம்முறை முதன்முறையாக ஒரேதடவையில் 51 முஸ்லிம் மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இவ்வருடம் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் தோற்றிய 51 மாணவர்கள் இவ்வாறு சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.

SRI LANKA - RARE OLD IMAGES


EMPIRE THEATRE 1941

GOVERNMENT BUILDINGS - CHATHAM STREET

KANDY TOWN 1962

GALLE FACE 1870

BAILLIE STREET - COLOMBO-1910

ACOLOMBO HARBOUR 1904

OHIYA RAILWAY STATION

CHATHAM STREET 1870

COLOMBO FORT EARLY 1900

Add caption

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை புதுவருடத்தன்று ஆரம்பம்

 


நாட்டின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையாக கொழும்பு - கண்டி வீதியை அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் புதுவருடத்துடன் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய உடகம ஸ்ரீபுத்தரக்கித்த இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈராக்கை நோக்கி நகரவிருக்கும் ஸியோனிஸ்ட்கள்


தேசிய பாதுகாப்பு கவுன்சில். இது தான் இஸ்ரேலின் ஒட்டுமொத் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் இடம். டெல் அவிவில் அமைந்துள்ளது. அதன் இராணுவமாகட்டும், உளவமைப்புக்கள் ஆகட்டும், அரசாங்கமாகட்டும் இதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இஸ்ரேலில் செயற்படுகின்றன. அது இப்போது தனது வெப்தளத்தில் இஸ்ரேலிய மற்றும் உலகலாவிய யூதர்களிற்கு ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. ”ஈராக்கில் வர்த்தகத்தில் ஈடுபடுமாறு அது கோரியுள்ளது. மேலும் ஈராக்கில் சுற்றுலா செல்வதற்கான உல்லாச பயணிகளிற்கான ஒழுங்கு ஏற்பாடுகள் பற்றியும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் பிரகாரம் விண்ணப்பம் செய்த யூதர்களில் இஸ்ரேலில் குடியேற ஆர்வமுடைய யூதர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு ஈராக் உல்லாச பயணிகள் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். அதே போல் இஸ்ரேலில் முதலீடு செய்த யூதர்களிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முழு ஆயுத பயிற்ச்சி பெற்றவர்களிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

 

சீன மொழியில் பழமைவாய்ந்த அல் குர்ஆன் கண்டுபிடிப்பு!


பீஜிங்: மிகவும் புராதான பழமை வாய்ந்த சீனா மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் சீனாவில் கண்டுபிடிப்பு. இந்த குர்ஆன் கையால் எழுதப்பட்டு கடந்த 1912-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குர்ஆனை முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி மாலைதீவில் பேரணி

 
மாலி: மாலைதீவில் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமுல்படுத்தக் கோரியும், இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை முடிவுக்கு கொண்டுவரவும் மாலைதீவின் தலைநகரான மாலியில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.


பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், முக்கிய எதிர்கட்சியான அதாலத் கட்சியும் இணைந்து இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.


கிழக்கு மாகாணத்தில் வகாபிச இயக்கம் உள்ளதாகவும் அவ்வியக்கத்திற்கு அரபு நாடுகள் உதவி வழங்குவதாகவும் ஆயுதப்பயிற்சி வழங்குவதாகவும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தமைக்கு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ. சுபையிர், செயலாளர் அஸ்ஷேய்க் ஏ.எம். அன்சார் நவமி ஆகியோர் கையெழுத்திட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இஸட் புள்ளி தரவரிசை சர்ச்சை: அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் விசேட சந்திப்பு


க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இஸட் புள்ளி தரவரிசையில் ஒழுங்கீனங்கள் ஏற்பட்டமைக்கான காரணங்களை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 20

மலவாயிலில் மறைக்கப்பட்டிருந்த ரூ. 50 இலட்சம் பணத்துடன் சந்தேகநபர் கைது



50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை மலவாயிலில் வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபரிடமிருந்து 33ஆயிரம் யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, December 12

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. அரபு லீக் அனுசரனையுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் மஸ்ஜிதுல் குதுஸ், மீதான அத்துமீறல்கள், மற்றும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளால் புனித ஜெருசலம் நகரில் சுகாதார, கல்வி துறைகளில் ஏற்பட்டு வரும் தாக்கம் தொடர்பிலும் ஏனைய அத்துமீறல்கள் தொடர்பிலும் அங்கு ஆராயப்படவுள்ளது என்று ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கின்றது.

மூன்றாம் உலக போரே வந்தாலும் சீனா ஈரானை பாதுகாக்கும்



பிய்ஜிங்: ஈரானை பாதுகாப்பதற்காக மூன்றாம் உலகப் போரே உருவானாலும் சீனா ஈரானுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கும் என மேஜர் ஜெனரல் ஜாங் ஜாவொஜாங் கூறினார்.


தெஹ்ரான் அணு ஆயுத சோதனையை காரணம் காட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், தொடர்ந்து ஈரானை அச்சுறுத்தி வந்தபோது அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் அனுமதி இருப்பதை சுட்டி காட்டி ஈரான் அதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவக்குல் கர்மான் நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்



சமாதானத்திற்கான நோபல் பரிசு யெமனிய செயற்பாட்டாளரும், அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவருமான தவக்குல் கர்மானுக்கு  நோர்வேயில் வழங்கப்பட்டது.

நோபல் குழுவின் தலைவர் தோர்ப்ஜோஏர்ன் ஜாக்லண்ட் ஒஸ்லோ நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் இதனை வழங்கி வைத்தார்.

தவக்குல் கர்மான் நோபல் பரிசு பெறும் அறபுலகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வரலாற்றில், இப்பரிசைப் பெறும் வயதில் மிகவும் இளையவர் இவரே என்பது இன்னொரு முக்கியமான அம்சம்.

விமானத்தை தர முடியாது:ஈரான் ராணுவம் திட்டவட்டம்


நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது' என, ஈரானின் புரட்சிப் படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. தொடர்ந்து கடந்த 8ம் தேதி, அந்த விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிலர் பார்வையிடும் வீடியோவையும் வெளியிட்டது.



இந்நிலையில், ஈரானின் புரட்சிப் படை துணைத் தளபதி உசேன் சலாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில்

ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது, போரைத் தூண்டும் நடவடிக்கை. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை' என தெரிவித்தார்.

ஆர்.க்யூ.,-170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரிகள், அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணினி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

ஆனால், எப்படி அந்த விமானத்தை தரையிறக்கினர் என்பதை சொல்ல மறுத்த சலாமி, "ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி குறைவானது தான்' என்றார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அடுத்த மாதம் அதிரிக்கும்?




ரூபாவின் மதிப்பு குறைவடைந்ததையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் ஜனவரி முதல் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அரிசி, மா, சீனி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் முழுமையாக கையிருப்பில் உள்ளதாக பழைய சோனகத் தெரு வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கே. பழனியாண்டி சண்டே டைம்ஸுக்குத் தெரிவித்தார்.
நத்தார் மற்றும் புதுவருடக் காலத்தில் வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய விலை நீடித்திருக்கும். ஆனால் இப்பொருட்களை வாங்குவதற்கு புதிய கட்டளைகள் கொடுக்கப்படும்போது, விலை அதிகரிப்பு ஏற்படும் என பழனியாண்டி தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு தவிர்க்கப்பட முடியாத ஒரு பொருளாக பால் மா இருககும் என வர்த்தக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதுவரை பால் மா விலை அதிகரிப்பை நுகர்வோர் அதிகார சபை தடுத்து வந்தது.
எனினும் உயர்ந்த விலைக்கு பால்மாவை இறக்குமதி செய்து இப்போதைய விலைக்கு விற்பனை செய்வது சாத்தியமில்லை என  முன்னிலை இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்களும் இதேபோன்ற பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.
ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்காக, ரூபாவின் பெறுமதியை மூன்று சதவீதத்தினால் கடந்தமாதம் அரசாங்கம் குறைத்தது. (சண்டே டைம்ஸ்)

Friday, December 2

ஹஜ் யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறை யாக்குமாறு கோரிக்கை

அதிபர்கள், ஆசிரியர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சம்பளமற்ற விடுமுறை பெறுவதில் சிரமங்கள்: புனித ஹஜ் யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறையாக்குமாறும் இதற்கெனத் தாபனக் கோவையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோக்கை விடுத்துள்ளது. இது விடயமாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம். அனஸ், தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சீ.எம். சாதிகீன் ஆகியோர் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோக்கை விடுத்துள்ளனர்.

அக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ள தாவ-து, போதிய பண வசதியும் தேகாரோக்கியமும் உள்ளபோது முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகளுள் ஒன்று புனித ஹஜ் ஆகும். இதற்காக மக்கா நோக்கிப் பயணிக்கும் யாத்திகர்கள் நாற்பது நாட்கள் வரை அங்கு தங்க வேண்டியுள்ளது.
இதற்கென இலங்கைக்கு வெளியே சம்பளமற்ற விடுமுறையில் செல்ல அனுமதி பெற்றுக் கொள்வதில் கிழக்கு மாகாண முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
சவூதி அரசின் கட்டுப்பாட்டால் ஆண்டு தோறும் விஸாபெற்றுக் கொள்வதில் பல் வேறு சிரமங்களை அனுபவிக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் கட்டுப் பாட்டால் கிடைக்கும் விஸாவில் பயணிக்க சம்பள மற்ற விடுறை பெற்றுக் கொள்வதில் அதைவிட அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
போதிய பண வசதியுள்ள போது மேற்கொள்ளும் புனித ஹஜ் யாத்திரைக்கான வெளிநாட்டுப் பயணத்திற்கு சம்பள மற்ற விடுறை பெற முன்னைய லீவுகளில் போதிய சேமித்த பிணி விடுறை இல்லை என்ற காரணத்தினாலேயே இவர்களது பயண அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.
எந்தவொரு மாகாணத்திலுமில்லாத தாபனக் கோவையை மீறிய கிழக்கு மாகாண ஆளுநரின் இந்தப் பொருத்த மற்ற நடைமுறைகளைத் தளர்த்தக் கோரி ஜனாதிபதிக்கும் முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும் விடுத்த-கோரிக்கைக்கு ஜனாதிபதி மாத்திரம், கல்வி அமைச்சின் செயலாளருக்குப் பொருத்தமான நடவடிக்கைக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
இற்றைவரை எந்த நடவடிக்கையும் எவராலும் எடுக்கப்படவில்லை. எனவே, புனித ஹஜ் பயணத்திற்கான யாத்திரைக் காலத்தை விசேட விடுமுறையாக்கும் வகையில் தாபனக் கோவையின் ஙீஐஐ ஆம் அத்தியாயம் 23:1, 23: 2 ஆம் பிவுகளில் திருத்தம் கொண்டுவரும் பிரேர-ணையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும், அதனை நிறைவேற்றி அமுல்படுத்த ஆவன செய்யுமாறும் கோருகின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நான்கு மாவட்டங்களில் மட்டும் 40ஆயிரம் பாலியல் தொழிலாளிகள்!- ஐக்கிய தேசிய கட்சி


இலங்கையில் மாதாந்தம் 2கிலோ ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகவும், நான்கு மாவட்டங்களில் மாத்திரம் 40ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபிர் காசீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று புதன்கிழமை (30.11.2011) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும் அவர் தெரிவிக்கையில்,  

பாதாள உலகக் குழுத் தலைவர் ஜலீல் மொஹமட் பெரோஸ் கடத்தப்பட்டார்


பாதாள உலகக் குழுத் தலைவர் மொஹமட் ஜலீல் மொஹமட் பெரோஸ் எனப்படும் பெரோஸ் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரோஸ் நேற்று வியாழக்கிழமை நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 1

முஸ்லிம் பெண்களின் உடை பற்றிய வரைவிலக் கணம் கோரப்படும்

முஸ்லிம் பெண்களின் உடையான ஹிஜாப் தொடர்பில் முஸ்லிம் அல்லாத சில பாடசாலைகளில் மாணவர்களும், முஸ்லிம் பெண் ஆசிரியர்களும் இஸ்லாமிய  உடையணிவதில் பல சந்தர்பங்களில் எதிர்ப்பையும் வற்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதை வெளிவரும் செய்திகள் மூலம் எமக்கு தெளிவாக அறியமுடியுமாக உள்ளது.
இந்த தடைகளும் வற்புறுத்தல்களும் முஸ்லிம் மாணவியர் ஆசிரியர் அணியும் வெவ்வேறு விதமான உடைகளுக்கு எதிராகவுள்ளது. சிலர் தலையை மட்டும் மறைத்து சாரியுடுத்தி செல்கின்றனர், சிலர் ஹிஜாப் அபாயா உடையில் செல்கின்றனர், இன்னும் ஒரு சிலர் நிகாப் அணிந்து முழுமையாக தங்களை மறைத்து செல்கின்றனர். இந்த வகையில் அண்மையில் தென்பகுதி சிங்கள பாடசாலை ஒன்றுக்கு நிகாப் அணிந்து செல்லும் முஸ்லிம் ஆசிரியர் ஒருவரை பாடசாலைக்கு முகத்தை மூடி நிகாப் அணித்து வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக  தெரிய வருகின்றது.  இது தொடர்பாக விடயத்துடன் தொடர்ப்பு பட்ட அரச அதிகாரி ஒருவர்  வழங்கிய தகவலை இங்கு தருகின்றோம்.

மாளிகாவத்தை மையவாடியை கபளீகரம் செய்ய தனியார் கம்பனி முயற்சி



மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக தனியார் கம்னியொன்று மண் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளதாக கொம்பனித்தெரு பள்ளிவாசல் நிர்வாக சபை அறிவித்துள்ளது.
 

கலாநிதி காமில் ஆஸாத் காலமானார்



Janasa Message logoபேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி எம்.என்.எம். காமில் ஆஸாத் காலமானார். அவரது ஜனாஸா இன்று (01.12.2011) மாலை 4.00 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

குறைந்தளவு லஞ்சம் பெறும் நாடுகளில் இலங்கைக்கு 86வது இடம், 1ம் இடத்தில் நியூசிலாந்து



குறைந்தளவு லஞ்சம் பெறும் நாடுகளில் இலங்கைக்கு 86வது இடம், 1ம் இடத்தில் நியூசிலாந்து




ஊழல் கண்காணிப்பு சர்வதேச அமையம் வெளியிட்டுள்ள குறைந்த அளவு லஞ்சம் வாங்கும் நாடுகள் குறித்த 2011ம் ஆண்டு அறிக்கையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

2010ம் ஆண்டு அறிக்கையில் 91வது இடத்தைப் பிடித்த இலங்கை 2011ம் ஆண்டு அறிக்கையில் மூன்று இடங்கள் முன்னோக்கி 86வது இடத்தைப் பிடித்துள்ளது.

அறிக்கையின் படி இலங்கை 3.3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

178 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கணிப்பீட்டில் இலங்கையுடன் 86வது இடத்தை ஜமேக்கா. பனாமா, பல்கீரியா மற்றும் சேர்பியா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

இவ்வறிக்கையில் இந்தியா 95வது இடத்திலும் சீனா 75வது இடத்திலும் உள்ளதுடன் முதல் இடத்தை நியூசிலாந்து பெற்றுள்ளது.

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகள் தயார் – ஈரான் பாதுகாப்பு அமைச்சர்


November 30, 2011

தெஹ்ரான்: இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.

வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மடையர்களின் சாம்ரச்சியமான பாராளுமன்றம் :22,500 தேங்காய்கள் கடலில் போடப்பட்டது உண்மையே – அமைச்சர் ஜோன்ஸ்டன்


Dayasiri-Jonston 
கடந்த வருடம் 688,506 ரூபா பெறுமதியான 22,500 தேங்காய்கள் கடலில் போடப்பட்டன என உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை சிறுவர்களை வெளிநாடுகளுக்கு விற்ற கிறிஸ்தவ கன்னியாஸ்திரி கைது



கல்கத்தாவில் அன்னை திரேசாவினால் ஆரம்பிக்கப்பட்ட மிசனரியினரின் (Missionaries of Charity convent) கொழும்பு கிளையின் கன்னியாஸ்திரி மடம் ஒன்றை சேர்ந்த அருட்சகோதரி ஒருவர் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்று வந்த சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் நாளை நீதிமன்றில் நிறுத்தப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குர்ஆன் மத்ரஸாவை மூடுமாறு சிங்கள பேரினவாதிகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)



கொழும்பு - தெஹிவளை கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸா ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது .

குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம்  மேற்கொள்ளபட்டுள்ளது.  பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்துள்ளது எனினும் போலீசார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் சிறிய மதரஸாவாக இயங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.