நாட்டின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையாக கொழும்பு - கண்டி வீதியை அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் புதுவருடத்துடன் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய உடகம ஸ்ரீபுத்தரக்கித்த இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் அங்கு குறிப்பிடுகையில், கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை கண்டியிலிருந்து ரம்புக்கன வழியாக கொழும்புக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. என்றும் பலரின் விருப்பத்திற்கு அமைவாக வீதி அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அதாவது புதிய தீர்மானத்தி ற்கமைய கண்டி - கொழும்பு வீதி, குருநாகல் வழியாக அமைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த நெடுஞ்சாலை அமைப்பதற்கு எட்டு முதலீட்டாளர்கள் முன்வந்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment