இலங்கை சட்டக் கல்லூரி வரலாற்றில் இம்முறை முதன்முறையாக ஒரேதடவையில் 51 முஸ்லிம் மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
இவ்வருடம் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் தோற்றிய 51 மாணவர்கள் இவ்வாறு சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
இப்போது சில வருடங்களுக்கு முன்னர் சட்டக்கல்லூரிக்கு முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெறுவதே சவாலாக இருந்துவந்த நிலையில், இம்முறை மொத்தமாக 51 மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளமை ஒரு மகத்தான விடயமேயாகும்.
சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்ற இந்த 51 மாணவர்களுக்கும் யாழ் முஸ்லிம் வலைத்தளம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது. அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்..!
No comments:
Post a Comment