முஸ்லிம் பெண்களின் உடையான ஹிஜாப் தொடர்பில் முஸ்லிம் அல்லாத சில பாடசாலைகளில் மாணவர்களும், முஸ்லிம் பெண் ஆசிரியர்களும் இஸ்லாமிய உடையணிவதில் பல சந்தர்பங்களில் எதிர்ப்பையும் வற்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதை வெளிவரும் செய்திகள் மூலம் எமக்கு தெளிவாக அறியமுடியுமாக உள்ளது.
இந்த தடைகளும் வற்புறுத்தல்களும் முஸ்லிம் மாணவியர் ஆசிரியர் அணியும் வெவ்வேறு விதமான உடைகளுக்கு எதிராகவுள்ளது. சிலர் தலையை மட்டும் மறைத்து சாரியுடுத்தி செல்கின்றனர், சிலர் ஹிஜாப் அபாயா உடையில் செல்கின்றனர், இன்னும் ஒரு சிலர் நிகாப் அணிந்து முழுமையாக தங்களை மறைத்து செல்கின்றனர். இந்த வகையில் அண்மையில் தென்பகுதி சிங்கள பாடசாலை ஒன்றுக்கு நிகாப் அணிந்து செல்லும் முஸ்லிம் ஆசிரியர் ஒருவரை பாடசாலைக்கு முகத்தை மூடி நிகாப் அணித்து வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இது தொடர்பாக விடயத்துடன் தொடர்ப்பு பட்ட அரச அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலை இங்கு தருகின்றோம்.
தென்பகுதி சிங்கள பாடசாலை ஒன்றுக்கு சிங்கள பாடசாலை ஒன்றுக்கு நிகாப் அணிந்து செல்லும் முஸ்லிம் ஆசிரியர் ஒருவரை பாடசாலைக்கு முகத்தை மூடி நிகாப் அணித்து வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி அந்த முஸ்லிம் பெண் ஆசிரியர் தொடந்து பாடசாலைக்கு சென்றுவந்துள்ளார் என்று அறிய முடிகின்றது. இதை தொடந்து குறித்த பாடசாலை நிர்வாகம் அவரை பாடசாலைக்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளதகவும் இதனையடுத்து அந்த முஸ்லிம் பெண் ஆசிரியர் மனித உரிமை அமைப்பிடம் அடிப்டை உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடு செய்ததையடுத்து அந்த மனித உரிமை அமைப்பு இலங்கை கல்வி அமைச்சை தொடர்பு கொண்டுள்ளது.
தற்போது கல்வி அமைச்சு முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பான வரைவிலக்கணம் ஒன்றை அதாவது இதுதான் அல்லது இவைகள்தான் முஸ்லிம் பெண்களின் உடை என்பதை வரைவிலக்கணப்படுத்தி தருமாறு அகிய இலங்கை ஜம்இயதுல் உலமாவை கோரவுள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment