இலங்கையில் மாதாந்தம் 2கிலோ ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகவும், நான்கு மாவட்டங்களில் மாத்திரம் 40ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபிர் காசீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று புதன்கிழமை (30.11.2011) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மகிந்த சிந்தனையின் கீழ் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை மோசமான வகையில் திறந்தமயமாக்கி உள்ளதால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
மாதாந்தம் 2கிலோ ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதுடன் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கொலைச்சம்பவமொன்றும் இடம்பெறுகிறது.
நான்கு மாவட்டங்களில் மட்டும் 40ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment