பாணந்துறை கொறக்கானை என்ற இடத்தில் வர்த்தகர் ஒருவர் கோடரியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதையுடைய முகம்மது சித்தீக் என்பவர் என பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை, ஹொரேதுடுவை என்ற இடத்தில் இரும்புக் கடையொன்றை (ஹார்ட்வெயார்) நடாத்தி வந்த இவர் கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை இவ்வாறு படு கொலை செய்யப்பட்டார் என தெரியவருகிறது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சந்தேக நபர் பொலி ஸாரால் கைது செய்யப் பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாரிய வெட்டுக் காயத்திற்கு உள்ளான சித்தீக் ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரும் போது மரணமடைந்திருந்ததாகவும் பாணந்துறை அரச ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment