கடந்த வருடம் 688,506 ரூபா பெறுமதியான 22,500 தேங்காய்கள் கடலில் போடப்பட்டன என உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த வருடம் உள்ளுர் சந்தையில் தட்டுப்பாடு நிலவியதன் காரணமாகவே, இந்தியாவிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், அவை நாட்டை வந்தடைந்தபோது தட்டுப்பாடு இல்லாமலாகிவிட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார். இதனை தயாசிறி ஜயசேகர கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இத்தேங்காய்களை வீசாமல் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்குக் கொடுத்திருக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment