Monday, October 31

85 ரூபா பெற்றோலுக்கு 52 ரூபா வரி - இதுவே அரசின் பணக்கொள்ளை - ஐதேக

[ Mon, Oct 31 , 2011, 04:20 pm ]

இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு காரணம் உலக சந்தை விலை அதிகரிப்பு அல்ல எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளே அதற்குக் காரணம் என குற்றம் சுமத்தியுள்ளது.

Tuesday, October 25

லிபியாவில் ஷரீஆ ஆட்சி: இடைக்கால அரசு அறிவிப்பு



கேணல் கடாபியின் 42 வருடகால ஆட்சி முடிவடைந்ததையடுத்து புதிய லிபியாவில் இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் ஆட்சி நடத்தப்படும் என அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் அறவித்துள்ளது.
கடாபியின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால தலைவர் முஸ்தபா ஆப்தீல் ஜலீல் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தினார். அப்போது லிபியாவில் ஷரீஆ அடிப்படையில் ஆட்சி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

'ஷரீஆவுக்கு முரணான எந்த சட்டமும் நீக்கப்படும்' என அவர் அறிவித்தர். உதாரணமாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பல்தார திருமணத்திற்கு கடாபியின் ஆட்சியில்  தடை விதிக்கப்பட்டிருந்ததை அவர்சுட்டிக்காட்டினார்.
'திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டமானது ஷரீஆவுக்கு முரணானது. அது நிறுத்தப்பட்டுள்ளது' என ஆப்தீல் ஜலீல் கூறினார்.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை தற்காலிகமாக இடை நிறுத்த முடிவு - நிறுவனர் அசாஞ்ச்


விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிமாக தனது தளத்தின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச்.

அடுத்த மாதம் கெய்ரோவில் ஃபத்ஹ்-ஹமாஸ் சந்திப்பு


October 24, 2011

ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸும் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் அடுத்த மாதம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் சந்திப்பை நடத்துவார்கள். சந்திப்பை நிகழ்த்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் இஸ்ஸத் அல் ராஷிக் அறிவித்துள்ளார். ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸ் 2007-ஆம் ஆண்டு காஸ்ஸாவில் ஆட்சிக்கு வந்ததைத்தொடர்ந்து இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

Monday, October 24

துனிசியாவில் தேர்தல் - இஸ்லாமிய கட்சியான 'அந்நஹ்தா' வெற்றி பெறும் வாய்ப்பு!



October 23, 2011

மக்கள் எழுச்சி மூலமாக சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட துனீசியாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய ஜைனுல் ஆபிதீனை முல்லைப்பூ புரட்சியின் மூலமாக வெளியேற்றி 9 மாதங்களுக்கு பிறகு அங்கு தேர்தல் நடைபெறுகிறது. 72 லட்சம் வாக்காளர்கள் 217 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தேர்வுச் செய்வார்கள்.

Sunday, October 23

சீனாவுடனும் சிறீலங்கா இராஜதந்திர மோதல்

sri_lanka__china

சிறிலங்கா அரசின் நிபந்தனைகளுக்கு இணங்காது போனால், கொழும்பில் சுற்றுலா விடுதி, வணிக மற்றும் பொழுதுபோக்கு வளாகம் ஆகியவற்றை அமைப்பதற்காக சீன அரசு நிறுவனத்துடன் செய்து கொண்ட 500 மில்லியன் டொலர் உடன்பாட்டை கைவிட நேரிடும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.  

Saturday, October 22

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி


ஆ. ஜலீல்

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு ...பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது......இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

முஸ்லிம்கள் சம்மந்தமான சிங்கள கமிசனின் எண்ணமும் அதன் பின்னரான செயற்பாடுகளும்


சோனவன்ருசியாக சாப்பிடுவான். தகுதிக்கு மீறிய
 ஆடைகளை உடுத்துவான். கணக்கு பார்க்காமல்
 செலவழிப்பான். கொலஸ்ட்ரோல், டயபிடிக் வந்து அவஸ்தை 
படுவான். ஹார்ட் அட்டாக் வந்தால் அப்பலோவில் பைபாஸ்
 செய்வான். மய்யத்து வீட்டு 3ம் கத்தத்திற்கும் சிறப்பாக
 சஹனில் புரியாணி ஓடர் பண்ணி விருந்து வைப்பான். 
அவ்வளவு தான். இது தான் இலங்கை சோனவனின் வாழ்க்கை. 
ஆனால் இந்த சோனவனை பற்றி சிங்கள இனவாத 
சக்திகளும், பொளத்த மதவாத சக்திகளும் புரிந்து 
வைத்திருப்தோ வேறு விதமாக. அவர்கள் புரிதல் எப்படி 
என்று சற்று பார்ப்போம்.
  • சோனவன் (தம்பிலா) இந்த நாட்டிற்கு விசுவாசமில்லாதவன்.
  • பாகிஸ்தானையும், சவுதி அரேபியாவையும் நேசிக்கும் துரோகி.
  • வியாபாரத்தில் மோசடி, கலப்படம் செய்பவன்.
  • தாடி வைத்துக்கொண்டு பொய் சொல்பவன், வாக்கு
          மாறுபவன்.
  • இலங்கையின் நகரங்களில் வாழ்ந்து கொண்டு மண்ணின்
           மைந்தர்கள் சிங்களவர்களை கிராமப்புரங்களில் முடக்கியவன்.
  • பொளத்த சிங்கள நாட்டில் அராபிய கலாச்சாரங்களை 
           திணிப்பவன்.
  • புலி பயங்கரவாதிகளுடனான யுத்தத்தில் ஒதுங்கியிருந்தவன்.
          தனது சமூகத்திற்கு சேதமில்லாமல் தப்பிக்கொண்டவன்.
  • சிங்கள சமூகம் செய்ய வேண்டிய வர்த்தகத்தை தன்வசம்
            வைத்துக்கொண்டு தனியாதிக்கம் செய்பவன்.
  • இவனின் முன்னோர்களான அராபியர்கள் அப்பாவி சிங்கள
          பெண்களை பலவந்தமாகவும், பணத்தாசை காட்டியும் 
           கற்பை சூறையாடியவர்கள்.
  • சிங்கள ரத்தத்தில் வந்து இஸ்லாமிய தனித்துவம் பேசும் 
           துரோகிகள்
  • இப்போது கல்வியிலும் சிங்கள சமூகத்தின் உரிமைகளை
            தட்டிப் பறிப்பவர்கள்.
  • சோனவனின் மதத்தை சேர்ந்த இஸ்லாமியர்களான 
          அரேபியர்களே அப்பாவி சிங்கள யுவதிகளை வீட்டு 
          பணிப்பெண்களாக வாடகைக்கு அமர்த்தி அவர்களின் 
         கற்பை தினமும் ருசிப்பவர்கள், கொடிய அநியாயங்களை
         செய்பவர்கள்.
  • இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய 
           சாம்ராஜ்யம் அமைக்க திட்டமிடுபவர்கள்.
  • புத்தளம் போன்ற பிரதேசங்களில் இஸ்லாமிய சட்டங்களை
           திணிப்வர்கள்
  • குருநாகல் மாவட்டத்தினதும், கொழும்பு மாவட்டத்தினதும்
          சிங்கள மக்களின் நிலங்களை ஏமாற்றி விலைக்கு 
          வாங்குபவர்கள். இது பிரபாகரனின் பிரிவிணையை விட 
          மிகப் பயங்கரமானது
  • பொளத்த சாத்வீக கொள்கைக்கு முரணாக மாடுகளை 
          வதை செய்பவர்கள் மற்றும் அவற்றை தினமும் 
          விழுங்குபவர்கள்
  • சிங்கள பிரதேசங்களில் பள்ளிவாயல்களை அமைத்து,
           பிரதேசங்களை இஸ்லாமிய மயப்படுத்துபவர்கள்.
  • அல்கைதா, ஹமாஸ் போன்றவற்றில் பயிற்சி எடுத்து 
          சிங்களவர்களை அழிக்க முயல்பவர்கள்.

மேலே சொன்னவைகள் அனைத்தும் வெறுமனே
 பேரினவாதத்தின் புரிதல்கள் மட்டுமல்ல. 1997 செப்டம்பர்
 மாதம் தொடராக நிகழ்ந்த விசாரணைகளின் பின் சிங்கள 
பொளத்த மக்களிற்கு இந்த நாட்டில் இழைக்கப்பட்ட 
அநீதிகள் பற்றி சிங்கள கமிஷனில் முஸ்லிம்கள்
 தொடர்பாக முழங்கப்பட்ட வார்த்தைகள். இவற்றை 
சொன்னவர்கள் சாதாரண சிங்களவர்கள் அல்ல. மாறாக
 படித்த உயர் நிலை சிங்களவர்கள். புத்திஜீவிகள் வட்டத்திலும்,
 தொழில்சார் வல்லுனர்கள் மட்டத்திலும் உள்ள சிங்களவர்கள்.
 பொளத்த மத உயர் நிலை பீடாதிபதிகள். பல்கலைகழக
 பேராசியர்கள். மருத்துவதுறை நிபுணர்கள், சட்ட 
வல்லுனர்கள். புரிகிறதா இப்போது. இந்த பிரச்சனைகளிற்கு 
சிங்கள கமிஷன் உத்தேச தீர்வுகளை முன்மொழியுமாறு,
  இலங்கை கொழும்பு பல்கலை கழக பொளதீக, கணிதவியல் 
பேராசிரியர் நளின் டீ சில்வாவிடம் கூறியது. அதற்கான
 தீர்வுகளாக அவர் சில பிரேரனைகளை சமர்ப்பித்தார். 
அவை வருமாறு..

  • முஸ்லிம்கள் இந்த நாட்டின் வந்தேறு குடிகள். ஆகவே 
          இவர்களிற்கு இந்த நாட்டில் வாழ மட்டுமே உரிமை உண்டு.
         ஆட்சியிலோ அல்லது நிர்வாக விடயங்களிலோ 
         பங்கெடுக்க எந்த ஒரு உரிமையையும் வழங்க கூடாது.
  • வர்த்தகம் முழுமையாக பொளத்த சிங்களவர்களால் 
         ஆதிக்கம் செலுத்தப்படல் வேண்டும். முஸ்லிம்கள்
         வியாபாரம் செய்யலாம். ஆனால் ஏற்றுமதி, இறக்குமதி
          வர்த்தக உரிமை கி்டயாது.
  • நிலங்களை முஸ்லிம்கள் விட்டேத்தியாக வாங்க முடியாது.
         முஸ்லிம் முஸ்லிமின் நிலத்தையே வாங்கலாம். ஆனால்
         அவர்கள் நிலங்களை சிங்களவர்களிற்கு விற்க முடியும்.
  • பள்ளிவாயல்கள் (மஸ்ஜித்க்ள்) கட்டலாம் தடையில்லை. 
        ஆனால் அவற்றின் கட்டடக்கலை அமைப்பு “டகோபா” 
        வடிவிலேயே இருத்தல் வேண்டும். அராபிய கட்டடக்கலை
         (மினாரா - குதுப்) வடிவில் அல்ல.
  • முஸ்லிம்களின் பிற்பத்தாட்சி பத்திரங்களில் அவர்கள்
          பெயர் பதியப்படும் போது இறுதியில் சிங்கள பரம்பரை
         பெயர் காணப்படல் வேண்டும். (உதாரணமாக - சுல்தான் 
        அப்துல் காதர் முஹம்மத் நியாஸ் முதியன்சலாகே 
        ஹீண் பண்டா)
  • இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் போன்றவை 
          இரண்டு குழந்தைகளை பெறும் முஸ்லிம் குடும்பங்க
           ளிற்கு மட்டுமே உரித்தாகும்.
  • முஸ்லிம்களின் நிலப் பரம்பல் மாற்றியமைக்கப்படல்
          வேண்டும்
  • கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணி மற்றும் 
           நிர்வாக கட்டமைப்பு மாற்றப்படல் வேண்டும்.
  • ஹஜ் செய்வதற்கு பொலிஸ் நற்சாட்சி பத்திரம் 
          பெறல் அவசியம்.
  • மாடுகள் மற்றும் ஆடுகள் அறுப்பதை முற்றாக தடை
          செய்தல் வேண்டும்.
  • மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியின் இறக்குமதியும் 
           தடை செய்யப்படல் வேண்டும்
  • இஸ்லாமிய மதரஸாக்கள் அரசின் அனுமதியுடன் 
           மட்டுமே ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
  • சிங்கள பிரதேசங்களில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் 
           தடை செய்யப்படல் வேண்டும்.
  • கட்டாய மதமாற்றம் செய்யும் இஸ்லாமிய நிறுவனங்கள்
          சீல் வைக்கப்படல் வேண்டும். போதகர்கள் சட்டத்தின் 
          முன் நிறுத்தப்படல் வேண்டும்.
  • முஸ்லிம் பெண்கள் முகம் மூடி வீதியிலோ அல்லது
            பொது இடங்களிலோ நடமாட முடியாது.
  • முக்கிய நகரங்களில் இருந்து முஸ்லிம்கள் 
           வெளியேற்றப்படல் வேண்டும். அவர்கள் பரவலாக 
          கிராமப்பகுதிகளிற்கு பின்தள்ளப்படல் வேண்டும். இதன்
          மூலம் அரச வைத்திய மற்றும் இன்னோரன்ன 
          சேவைகள் சிங்கள சமூகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு
          உருவாதல் வேண்டும்.
  • ஆங்கிலேயர்களால் முஸ்லிம்களிற்கு வழங்கப்பட்ட 
          பலதார மணம் தொடர்பான உரிமை, மண விலக்கு 
         சம்மந்தமான உரிமை மற்றும் சொத்துரிமை போன்றன
         தடை செய்ய்ப்படல் வேண்டும். 
  • இலங்கை முஸ்லிம்கள் ஸ்ரீ லங்கா ஜனநாயக சோஷலிச
          குடியரசின் சிவில் சட்டங்களிற்கு முற்றாக கட்டுப்படல் 
          வேண்டும்.

இவையே அவரது ஆலோசணைகள். இவை அனைத்தையும் 
சிங்கள கமிஷனும் அதன் நிர்வாக குழுவும் விசாரணை செய்த
 நீதிபதிகளும் ஏகமனதாக அங்கீகரித்தனர். (தமிழர்கள் 
சம்மந்தமாகவும், நாட்டின் பிரிவினை சம்மந்தமாகவும் கூட 
பல பிரேரணைகள் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன
. “இவை அனைத்தும் அவர்களது “கனவு பொளத்த 
தேசத்தில்” (Dream Buddhist Nation) சட்டமாக நடை
முறைப்படுத்தப்படும் என ஏகோபித்து முடிவானது.

இதன் பின்னரான கமிஷனின் இறுதி தீர்ப்பில் நாளைய சிங்கள 
பொளத்த அரசில் சிறுபான்மையினர் தொடர்பாக கடைபிடிக்க 
வேண்டிய கொள்கைகள் தொடர்பாக ஒரு நீண்ட தீர்மானங்கள்
 எடுக்கப்பட்டன. அவை ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டது. 
ஆனால் அவற்றை அன்று ஜனாதிபதியாக இருந்தசந்திரிகா 
பண்டாரநாயக்க குமாரரணதுங்க பெரிதாக எடுத்துக் 
கொள்ளவில்லை. ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கதிர்காமர், 
ஜெயதேவ உயன்கொட போன்ற கல்விமான்கள் இவற்றின் 
விபரீதங்கள் பற்றி தக்கவாறு எடுத்துரைத்தனர். 

ஆனால் இன்றைய நிலைமைகள் வேறு. பொளத்த இனவாத 
சக்திகள் ஆட்சியில் பங்காளியாக இருக்கின்றன. இராணுவ 
கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பொளத்த சிங்கள
 இனவாத ஊடகங்கள் அவர்களின் மறை கரங்களின் 
கட்டுப்பாட்டில் உள்ளன. பர்மா (மின்மார்) இவர்களிற்கு நல்ல 
முன் உதாரணமாக உள்ளது. புலிப் பயங்கரவாதத்திற்கு 
முற்றுப் புள்ளி வைத்தாகி விட்ட நிலையில் அவர்களது 
அரசியல் இருப்பை தக்க வைக்க இது ஒரு நல்ல கிராக்கி 
மிக்க அரசியல் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இது சில
 வேளைகளில் அரசியலில் உள்ள நல்ல மனிதர்களையும் 
தாண்டி தனது கரங்களை நீட்டும். தங்கள் அரசியல்
 இருப்பிற்காகவும், மீட்சிக்காகவும் அந்த நல்ல மனிதர்களும்
 மௌனித்து போகின்றனர். 

இப்போது புரிகிறதா கிறிஸ் மனிதன் யார் என்று? கிண்ணியா
 மஸ்ஜித் தாக்குதல் ஏன் என்று? காத்தான்குடி அராஜகம்
 ஏன் என்று? 

இனவாத ஆதிக்க சக்திகள் கிறிஸ் மனிதனின் உளவியல்
 போரின் மூலம் ஒரு விடயத்தில் குறியாக இருக்கின்றன. 
அது என்ன தெரியுமா? முஸ்லிம் இளைஞர்களின்
 தீவிரவாதத்தை, ஆத்திரத்தை கிளறி விடல் என்பதே
 அது. அதன் வழியாய் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத 
செயற்பாட்டை தமது தெரிவாக தேர்ந்தெடுக்க வேண்டும் 
என்பது அவர்களது அவா. அவ்வாறு நடந்தால் அவர்கள் 
ஆசைப்படும் எல்லாவற்றையும் படிப்படியாக நிறைவேற்றி
 விடலாம். முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் பட்டம்
 சூட்டிஅல்கைதாவுடனும், லஷ்கர் ஈ தைபாவுடனும்,
 ஹமாஸுடனும் இணைத்து பேசி, பயங்கரவாதத்தி்ற்கு
 எதிரான போரின் ஒரு முகமாகவே தாங்கள் இலங்கை
 முஸ்லிம் விவகாரத்தை கையாள்வதாக கருத்து வெளியிடுவர்.


குப்ர் அரசியலில் பங்கேற்றுள்ள முஸ்லிம் 
முதுகெலும்பற்ற பச்சோந்தி அரசியல்வாதிகளால் 
சமூகத்திற்கு எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. 
குப்ர் அரசியலை ஏற்றுக்கொண்டவன் குப்பாரின் 
அடிமை. குப்பாரின் அடிமையால் அல்லாஹ்வின் 
அடிமையை ஒரு போதும் பாதுகாக்கவும் முடியாது 
பலப்படுத்தவும் முடியாது. 

அமெரிக்க இராஜாங்க மற்றும் ஆசிய பசுபிக் கட்டளை
 மையங்களின் இடைக்கி்டையான கிழக்கு மாகாண 
ஜிஹாத் பற்றிய கருத்துக்கள், லஷ்கரின் இலங்கை 
தொடர்புகள் பற்றிய கருத்துக்கள், நோர்வேயின் 
கிறிஸ்தவ பயங்கரவாதியின் இலங்கை
 முஸ்லிம்களி்ன் வெளியேற்றம் தொடர்பான
 கொள்கை பிரகடனம் 
 போன்ற விடயங்கள் சற்று நெருடலாக
 உள்ளன. இவற்றிற்கான தொடர்புகள் பற்றியும், 
கிறிஸ் மனிதன் போன்ற இனவாத மறைவான 
சக்திகளின் தொடர்புகள் பற்றியும் தொகுத்து 
பார்க்கையில் இமாம் மஹதியின் வருகையின் 
அவசியம் அவசரமாக புரிகிறது. இல்லையெனின்.......

பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி _


   
 வீரகேசரி இணையம் 10/19/2011 2:15:33 PM
  நம்மில் பேஸ்புக் பற்றியோ, டுவிட்டர் பற்றியோ அறியாதவர் இல்லையெனலாம்.

சமூகவலையமைப்புக்கள் என பொதுவாக அறியப்படும் இவை பாவனையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்கியபோதிலும் விளம்பர வருவாய் மூலம் கோடிக்கணக்கில் காசை அள்ளுகின்றன.

Great Article - ‘சிங்களவர்கள் ஆகிய நாங்கள்’ : சுனில ஜெயவர்தன (கொழும்பு) – தமிழில்: எஸ் குமார்.

மோதல்கள் மற்றும் சமாதானம், அரசியல், ஆட்சி என்பனவற்றின் அடையாளம்
ஒரு சிப்பியானது சூழலிருந்து துகள்களை உறிஞ்சியெடுத்து முத்துக்களை உருவாக்குகிறது. அப்படியில்லாமல் அது எல்லாத் துகள்களையும் வடிகட்டி வெளியேற்றியிருப்பின் அது ஒரு கீழ்நிலைப் பிறவியாகவே வாழவேண்டியது அதன் தலைவிதியாக எழுதப்பட்டிருக்கும்.

சவூதி இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூட் வபாத்




October 22, 2011

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூட் தனது 83 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை அதிகாலை நியூயோர்க்கில் உயிரிழந்துள்ளார். கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டதுடன், முக்கிய புள்ளிகளில் ஒருவராகவும் கருதப்படுகின்றார். 


கடந்த 2009, ஆண்டு முதல் சுகவீனமுற்றிருந்த அவர் அமெரிக்காவிலும், மொராக்கோவிலும் சிகிச்சை பெற்று வந்தார். அவரது நோய் தொடர்பில் வெளியில் தெரிவிக்கப்படவில்லை.

Friday, October 21

Funny Transportations - இப்பிடியும் போகலாம்


http://salijoon.info/

39 மனைவிமார் 94 பிள்ளைகள், உலக சனத்தொகை அதிகரிப்பின் முக்கிய பங்காளர்!(படங்கள் இணைப்பு)

உலகத்தின் பெரிய குடும்பத்தை சந்தித்திருக்கிறோம். ஒரு மனைவியை மணம் செய்துகொண்டு கஷ்டப்படும் ஆண்களுக்கு மத்தியில் இவரொரு அவதார புருஷர். 39 மனைவிகளுடன் ஒரே இடத்தில் அதுவும் 94 பிள்ளைகளுடன் 100 அறைகளைக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையே தனது அந்தப்புரமாக மாற்றி வைத்திருக்கும் Ziona Chana, சாதாரண சிறு கைத்தொழில் செய்பவர்.
பிள்ளைகளில் பலர் வேலை செய்வதால் குடும்பம் ஒருவாறு ஓடுகிறது. மனைவிகளிடையே உள்ள ஒற்றுமை இன்னமும் இந்த குடும்பத்தை நிலைகுலைக்காமல் வைத்திருக்கிறது. ஒரு வேளை உணவுக்கு இவர்களுக்கு தேவைப்படும் உணவின் அளவு திருமண விருந்துக்கு பரிமாறப்படும் அளவை விட அதிகமாம்.

வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிப்பு நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.கா செயலாளர் கோரிக்கை



Thursday, October 20

இஸ்ஸாத்தை உன்மை படுத்தும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள் ! (அதிரவைக்கும் அத்தாட்சி)










கும்ரான் மலைக்குகை !



அல் குர ஆன் -  18:9. "(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?" 




  • சாவுக்கடல் சாசனச் சுருள்கள் :


இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியவர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்களது வரலாற்றுடன் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. "அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

பாரதவின் கொலை விசாரணையில் அம்பலமான புதிய தகவல்கள்


[ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 12:45.56 PM GMT ]
முல்லேரியாவில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் படுகொலை செய்யப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது அங்கு காணப்பட்ட கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்...
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வாவின் வாகன அணியில் நுகோகொடை பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன், முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாலக குணசேகர ஆகியோரும் இருந்தனர் என்ற தகவல் இன்று (20) கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திவின் கார்ச் சாரதியான போலகே சமன் என அழைக்கப்படும் லியனே சமந்த மற்றும் துமிந்த சில்வாவின் கார்ச் சாரதியான பாலசூரிய ஆராய்ச்சி சமிந்த ஆகியோர் வழங்கிய வாக்கு மூலத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என இன்று மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.