Tuesday, October 25

லிபியாவில் ஷரீஆ ஆட்சி: இடைக்கால அரசு அறிவிப்பு



கேணல் கடாபியின் 42 வருடகால ஆட்சி முடிவடைந்ததையடுத்து புதிய லிபியாவில் இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் ஆட்சி நடத்தப்படும் என அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் அறவித்துள்ளது.
கடாபியின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால தலைவர் முஸ்தபா ஆப்தீல் ஜலீல் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தினார். அப்போது லிபியாவில் ஷரீஆ அடிப்படையில் ஆட்சி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

'ஷரீஆவுக்கு முரணான எந்த சட்டமும் நீக்கப்படும்' என அவர் அறிவித்தர். உதாரணமாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பல்தார திருமணத்திற்கு கடாபியின் ஆட்சியில்  தடை விதிக்கப்பட்டிருந்ததை அவர்சுட்டிக்காட்டினார்.
'திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டமானது ஷரீஆவுக்கு முரணானது. அது நிறுத்தப்பட்டுள்ளது' என ஆப்தீல் ஜலீல் கூறினார்.
 
இந்த அறிவிப்பானது மேற்குலகில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்குலகை சமரசப்படுத்தும் முயற்சியாக "லிபியர்களான நாம் தாராளவாத முஸ்லிம்கள் என சர்வதேச சமூகத்திற்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்' என நேற்று முஸ்தபா ஆப்தில் ஜலீல் கூறினார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இத்தெளிவுபடுத்தலை அமெரிக்கா ஊக்குவிப்பதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளைஇந்நிலையில் அமெரிக்காவுக்கான லிபிய தூதுவர் அலி அவ்ஜாலி, அமெரிக்க சிபிசி தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், லிபியாவில் அமுல்படுத்தப்படவுள்ள ஷரீஆ சட்டமானது ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் அமுல்படுத்தப்பட்ட ஷரீஆ சட்டத்தைப் போன்றதாக இருக்காது எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment