[ Mon, Oct 31 , 2011, 04:20 pm ]
எரிபொருள் விலை அதிகரிப்பால் பொது மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அனைத்து அறவிடுகளையும் கழித்து பார்க்கும்போது இலங்கை துறைமுகத்திற்கு வரும் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 85 ரூபாவே என கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அரசாங்கம் பொது மக்களிடம் பெற்றோல் லீட்டர் ஒன்றுக்கு 52 ரூபா வரி அறவிட்டு கொள்ளையடிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதனால் அரசாங்கத்தின் பெற்றோல் விலை அதிகரிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென கயந்த கருணாதிலக கூறினார்.
No comments:
Post a Comment