Thursday, October 20

பாரதவின் கொலை விசாரணையில் அம்பலமான புதிய தகவல்கள்


[ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 12:45.56 PM GMT ]
முல்லேரியாவில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் படுகொலை செய்யப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது அங்கு காணப்பட்ட கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்...
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வாவின் வாகன அணியில் நுகோகொடை பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன், முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாலக குணசேகர ஆகியோரும் இருந்தனர் என்ற தகவல் இன்று (20) கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திவின் கார்ச் சாரதியான போலகே சமன் என அழைக்கப்படும் லியனே சமந்த மற்றும் துமிந்த சில்வாவின் கார்ச் சாரதியான பாலசூரிய ஆராய்ச்சி சமிந்த ஆகியோர் வழங்கிய வாக்கு மூலத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என இன்று மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment