வியாழக்கிழமை, 20 ஒக்டோபர் 2011 17:17
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாக லிபிய தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது.
கேணல் கடாபி 'பிடிக்கப்பட்டுள்ளதாகவும்' ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை என்பது உறுதியில்லை எனவும் லிபியாவை தற்போது நிர்வாகம் செய்யும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகளின் களத் தளபதி ஒருவர் அல் ஜஸீராவுக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை பிடிபட்டுள்ளதாகவும் அவரின் இரு கால்களும் காயமடைந்துள்ளதாகவும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பேச்சாளர் ஆப்தில் மஜித் ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment