Thursday, October 20

சார்ஜாவிலிருந்து சட்டவிரோத சிகரெட்களை கடத்திவந்த ஆசிரியர் சுங்க அதிகாரிகளால் கைது

சார்ஜாவிலிருந்து சட்டவிரோத சிகரெட்களை கடத்திவந்த ஆசிரியர் கைது



சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் வகைகளை கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 04.30 அளவில் சார்ஜாவில் இருந்து வந்த நபரே சட்டவிரோத சிகரெட் தொகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 31,600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் இலங்கை பெறுமதி 6 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment