Sunday, October 23

சீனாவுடனும் சிறீலங்கா இராஜதந்திர மோதல்

sri_lanka__china

சிறிலங்கா அரசின் நிபந்தனைகளுக்கு இணங்காது போனால், கொழும்பில் சுற்றுலா விடுதி, வணிக மற்றும் பொழுதுபோக்கு வளாகம் ஆகியவற்றை அமைப்பதற்காக சீன அரசு நிறுவனத்துடன் செய்து கொண்ட 500 மில்லியன் டொலர் உடன்பாட்டை கைவிட நேரிடும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.  
 
இவற்றை அமைப்பதற்காக நிலத்தை விற்பதா, நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதா என்று சிறிலங்கா அரசுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றியிருப்பதால், இந்தப் பாரிய முதலீட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
500 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த உடன்பாட்டைச் செய்து கொண்ட சீனாவின் தேசிய வான் பொறியியல் இறக்குமதி ஏற்றுமதி கூட்டுத்தாபனம் சிறிலங்கா அரசின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அவ்வாறு இணங்காது போனால் உடன்பாட்டை கைவிட நேரிடும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
காலிமுத்திடலில் உள்ள நிலத்தை சீன அரசு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கடந்த ஜனவரி மாதம் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியது.
ஆனால் கடந்த ஜுலை மாதம் நிலத்தை விற்பதற்குப் பதிலாக குத்தகைக்கு வழங்கும் வகையில் உடன்பாட்டை மீளாய்வு செய்யுமாறு சிறிலங்கா அதிபர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையிலேயே சிறிலங்கா அரசின் நிபந்தனைக்கு இணங்காது போனால் சீன நிறுவனத்தின் உடன்பாட்டை கைவிடும் நிலை ஏற்படும் என்று பசில் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
இராணுவ மைதானம் மற்றும் அதனை அண்டிய இந்த நிலத்தின் ஒருபகுதியில் ஏற்கனவே சங்கிரி லா நிறுவனமும் ஆடம்பர விடுதி ஒன்றை அமைத்து வருகிறது

No comments:

Post a Comment