October 23, 2011
மக்கள் எழுச்சி மூலமாக சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட துனீசியாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய ஜைனுல் ஆபிதீனை முல்லைப்பூ புரட்சியின் மூலமாக வெளியேற்றி 9 மாதங்களுக்கு பிறகு அங்கு தேர்தல் நடைபெறுகிறது. 72 லட்சம் வாக்காளர்கள் 217 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தேர்வுச் செய்வார்கள்.
ராஷித் கன்னோஷியின் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்தா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. நேற்று துனீசியாவின் வீதிகளில் பிரச்சாரம் ஆவேசத்துடன் நிறைவுற்றது. புதிய அரசியல் சட்டம் தயாராக்குவது வரை இடைக்கால அதிபரை ஆட்சியை பிடிக்கும் புதிய அரசு நியமிக்கும்.
No comments:
Post a Comment