ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸும் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் அடுத்த மாதம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் சந்திப்பை நடத்துவார்கள். சந்திப்பை நிகழ்த்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் இஸ்ஸத் அல் ராஷிக் அறிவித்துள்ளார். ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸ் 2007-ஆம் ஆண்டு காஸ்ஸாவில் ஆட்சிக்கு வந்ததைத்தொடர்ந்து இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
தற்பொழுது காஸ்ஸாவில் ஹமாஸும், மேற்கு கரையில் ஃபத்ஹும் ஆட்சி புரிகின்றன. சந்திப்பின் தேதி முடிவாகவில்லை எனவும், முக்கியமாக ஃபலஸ்தீன் குழுக்களிடையே ஒத்தக்கருத்தை உருவாக்குவதற்காக சந்திப்பு நடப்பதாகவும் ராஷிக் தெரிவித்துள்ளார். இரு பிரிவினரும் முன்பு கையெழுத்திட்ட ஃபலஸ்தீன் ஐக்கிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதை குறித்தும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவர். கடந்த வாரம் காலித் மிஷ்அலுடன் கெய்ரோவில் ஃபத்ஹ் தலைவர் அஸம் அல் அஹ்மத் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
No comments:
Post a Comment