வீரகேசரி இணையம் 10/19/2011 2:15:33 PM |
சமூகவலையமைப்புக்கள் என பொதுவாக அறியப்படும் இவை பாவனையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்கியபோதிலும் விளம்பர வருவாய் மூலம் கோடிக்கணக்கில் காசை அள்ளுகின்றன.
எனினும் இவற்றில் ஒரு சிறு பங்கையேனும் பாவனையாளர்களுக்கு தருவதில்லை எனினும் பாவனையாளர்களை நம்பியே இந்நிறுவனங்கள் இவற்றில் விளம்பரம் செய்கின்றன.
கூகுளின் யூடியூப் பாவனையாளர்களின் காணொளிகளுக்கு அவற்றின் வரவேற்பைப் பொறுத்துக் குறிப்பிட்ட தொகையினை வழங்குகின்ற போதிலும் அது மிகவும் குறைவு என்பது கவலையளிக்கின்றது.
ஆனால் இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் பாவனையாளர்களை ஈர்க்கும் வகையில் தனது விளம்பர வருமானத்தில் பாதியை அவர்களுக்கு வழங்கவென உருவாகியுள்ளது ஒரு சமூகவலையமைப்பு.
அதன் பெயர் www.chime.in எனினும் நம்மில் பலர் அதனை இன்னும் அறியவில்லை. காரணம் இவ்வலையமைப்பு நவம்பர் மாதமே உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபடவுள்ளது.
என்றபோதிலும் 'பப்ளிக் பீடா' அதாவது சோதனைத்தொகுப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் 'ஹபர்மீடியா'
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் வலையமைப்புகளை ஒத்ததாக அமைந்துள்ள போதிலும், மேலும் பல வித்தியாசமான சிறப்பம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.
பாவனையாளர்களின் நலன்கருதி இதனை வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போம், கொடுத்த வாக்குறுதியை இந்நிறுவனம் காப்பாற்றுமா என்று! _
No comments:
Post a Comment