Thursday, November 24
ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு
Labels:
கணணி,
சுவாரஷ்யமானவை
மொஸாட், சி.ஐ.ஏ. உளவாளிகள் ஈரானில் பிடிபட்டனர்
அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.ஐ.ஏ. (அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு) மற்றும் இஸ்ரேலின் மொஸாட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை புலனாய்வு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
குழந்தைகள் இல்லத்தில் 31 கர்ப்பிணிகள் - வெளிநாட்டுக்கும் விற்பனை
மொறட்டுவை - ராவணாவத்தை பகுதியில் குழந்தைகள் இல்லம் நடத்திச் செல்வதாகக்கூறி வெளிநாடுகளுக்கு சிறுவர்களை விற்பனை செய்யும் வர்த்தகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
முற்றுகையிடப்பட்ட இடம் குழந்தைகள் இல்லம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த இல்லத்தில் 42 குழந்தைகள் மாத்திரமே இருப்பதாக கூறப்பட்டிருந்த போதும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் நடத்திய சோதனையின்போது அங்கு 63 குழந்தைகள் இருந்துள்ளன.
Labels:
இலங்கை செய்திகள்
முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை மரணம்
இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றின்போது உடதலவின பகுதியில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 11 பேரின் படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரியான ரத்தவத்த, அதிகார வர்க்கத்தின் ஆசிர்வாதம் காரணமாக அந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து கீழ்நீதிமன்றங்களின் உதவியுடன் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை செய்திகள்
தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும்-வாசுதேவ நாணயக்கார
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழியில் பாட முடியும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடுவது என்ற நியதியில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனவும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுவதற்கு சில அதிகாரிகள் முயற்சித்த போதிலும் அரசாங்கம் இதற்கு அனுமதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு மொழிகளுமே தேசிய கீதத்தை பாட முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை செய்திகள்
Wednesday, November 23
தாக்கியது தவறுதான் இருந்தாலும் செய்ய வழியில்லை - மைத்திரிபால
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை அனுமதிக்கக்கூடிய ஒன்று அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும் தாக்குதல் நடத்தும் வழக்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்து வைத்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
அங்கு என்ன நடக்கும் என்று தெரிந்திருந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கையை அசைத்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பிட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதை தவிர்க்க எதிர்கட்சி சூழ்ச்சி செய்ததன் காரணமாகவே குழப்பநிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தாக்குதல் நடத்தும் வழக்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்து வைத்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
அங்கு என்ன நடக்கும் என்று தெரிந்திருந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கையை அசைத்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பிட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதை தவிர்க்க எதிர்கட்சி சூழ்ச்சி செய்ததன் காரணமாகவே குழப்பநிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான பயிற்சிக் கல்லூரியை உருவாக்க மதவிவகார அமைச்சு இணக்கம்:ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை
Wednesday, 23 November 2011 11:31
உலமாக்களை உருவாக்குகின்ற- அல்ஆலிம் பரீட்சைக்கு தயார்ப்படுத்துகின்ற அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களை, அரச பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதைப் போன்று விஷேட பயிற்சி வழங்கி அதனூடாக சிறப்பான விரிவுரையாளர்களை உருவாக்குவதற்கு ஒரு பயிற்சிக் கல்லூரி அவசியம் என்று அவர் புத்தசாசன மத விவகார அமைச்சினுடைய பாராளுமன்ற குழுவுக்கு ஆலோசனையை முன்வைத்திருந்தார்.
Labels:
இலங்கை செய்திகள்,
இஸ்லாமிய உலகம்
அனாதை இல்லங்களினதும் அனாதை பராமரிப்பு நிறுவங்களினதும் ஒன்றியம் உதயம்
Labels:
இலங்கை செய்திகள்,
இஸ்லாமிய உலகம்
வருட இறுதிக்குள் 3000 ஆசிரியர்கள் நியமனம்
Labels:
இலங்கை செய்திகள்
மோட்டார் சைக்கிள் பதிவுக்கு புதிய நடைமுறை
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Posts (Atom)




