[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 02:13 GMT ] |
பிரதேசசபைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணை குறித்துப் பேசுகிறது. ஆனால் சிறிலங்கா அதிபருக்கு முழு நாடுமே ஆணையை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
Thursday, July 28
தெருவிளக்குகளைப் பொருத்துவதற்கான ஆணையே கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது – பசில் ராஜபக்ச
Labels:
இலங்கை செய்திகள்
இரவு 7.30 முதல் 9 மணிவரை நாடகங்களை ஒளிபரப்பாதிருக்குமாறு தொலைக்காட்சிகள் கோரப்படும்
வியாழக்கிழமை, 28 ஜூலை 2011 05:00
இரவு 7.30 மணிமுதல் 9.00 மணிவரை தொலைக்காட்சிகளில் நாடகங்களை ஒளிபரப்பாதிருக்குமாறு தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் அமைச்சரவை கோரிக்கை விடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலம், பாடசாலை மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தினார். இதற்காக, நாட்டில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளிடம் கூட்டுக் கோரிக்கையொன்றை அமைச்சரவை விடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் கருத்துத் தெரிவித்த நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தொலைக்காட்சி நாடகங்களுக்குப் பதிலாக அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் மேற்படி ஒன்றரை மணித்தியாலங்களில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கூறினார்.
அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி, அப்படியானால் வயதானவர்கள்கூட தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிடுவர் என சிரித்துக்கொண்டே கூறினாராம்.
Labels:
இலங்கை செய்திகள்
Wednesday, July 27
2,700 அரச ஆசிரியர் நியமனங்களில் 230 பேர் மட்டுமே தமிழ் முஸ்லிம்கள்
[ புதன்கிழமை, 27 யூலை 2011, 10:34.30 AM GMT ]
இதற்கான நியமனக் கடிதங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அரசு விரைவில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் என்று இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் அதில் அரைவாசிப்பேருக்கு மட்டுமே இப்போது நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஏனையோருக்கும் நியமனங்கள் வழங்கப்படுமா என்று தகவல் எதுவுமில்லை.
Labels:
இலங்கை செய்திகள்
செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட மதிய உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
o
செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட மதிய உணவுப்பொதிகளை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. அவ்வுணவுப்பொருட்களை உட்கொள்ளும்போது, அச்சடிக்கப்பட்ட தாள்களில் காணப்படும் இரசாயனங்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே இதற்கு காரணமாகும்.
செய்தித்தாள்களிலுள்ள ஈயம், உணவுப்பொதிக்குள் அகத்துறிஞ்சப்படும் அதன்மூலம் அது உடலுக்குள் செல்லும் இதனால் மனிதர்களுக்கு நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவர் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் மதிய உணவுப்பொதிகளை விற்பனைசெய்யும் 105 விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து சுகாதார சான்றிழதலொன்றை பெற்றுக்கொள்ளுமாறும் விற்பனையாளரை இனம்காண்பதற்காக உணவுப்பொதிகளில் முத்திரையொன்றை பொறிக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
உணவுப்பொதி விற்பனையாளர்களால் விற்கப்படும் மதிய உணவுப்பொருட்களில் மூன்றில் ஒருபகுதி நண்பகல் அளவில் மோசமடைந்துவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதிய உணவுப்பொருள் தயாரிப்பாளரின் பெயர், தயாரிக்கப்பட்ட திகதி, நேரம் என்பனவற்றை விற்பனையாளர்கள் குறிப்பிட வேண்டும் எனவும் இவ்விதிகளை மீறினால் அவர்களின் பதிவுகள் ரத்துச்செய்யப்படும் எனவும் டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
Labels:
இலங்கை செய்திகள்
Tuesday, July 26
2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!
"எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி."
- Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.
வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்...
மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.
Labels:
இஸ்லாமிய உலகம்
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சிங்கள பெண் தெரிவு
கண்டி மாவட்டத்தில் யடிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் புஷ்பா கொடிதுவக்கு என்ற சிங்கள பெண்மணி 892 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் . யடிநுவர பிரதேச சபைக்கு இம்முறை இரு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட யடிநுவர மிக்தாத் 2,347 விருப்பு வாக்குகளைப் பெற்றும் ஐக்கிய தேசியக்கட்சியில் புதுமுகமாக களமிறங்கிய எம்.எல்.எம்.றம்ஸி 6,742 விருப்பு வாக்குகளைப் பெற்றும் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை,ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ரிஸ்மி மற்றும் எம்.அஸ்லம் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் எம்.மஹ்பூப், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.எம்.சின்திகார் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
Labels:
இலங்கை செய்திகள்
புத்தகம் வாசிக்கச் சென்றால் இலவசமாக பால் குடிக்கலாம்
July 26, 2011 09:39 am
கொழும்பு பொது நூலகத்துக்கு சென்று நாளாந்தம் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இலவச பால் பைக்கற் வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
நாளாந்தம் 200 தொடக்கம் 300 வரையிலான மாணவர்கள் கொழும்பு பொது நூலகத்தில் வந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இவர்களில் சிலர் தொலைவில் இருந்து வருபவர்கள் எனவும் கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் நூலகத்துக்குள் நுழையும் போது பால் பைக்கற்றுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இத்திட்டத்துக்கு சில தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் உதவி புரியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் நைட்ஸ் டேம்பளர் என்ற பயங்கரவாத அமைப்பு
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
பர்தாவுக்கு தடை - ஐரோப்பிய மனித உரிமை ஆணையம் கண்டனம்
July 25, 2011.... AL-IHZAN World News
பிரான்ஸை தொடர்ந்து ஐரோப்பாவில் இரண்டாவது நாடாக பெல்ஜியத்திலும் பெண்கள் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகத்தை மூடிச் சென்றால் 197 டொலர் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
பெல்ஜியம் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்ட மூலத்திற்கு அமைவாக இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த சட்டத்திற்கு எதிராக முகத்தை மூடும் வகையில் பர்தா அணிந்த இரு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய மனித உரிமை ஆணையமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரான்ஸிலும் இந்த தடைச் சட்டம் அமுலில் உள்ளது.
பிரான்ஸை தொடர்ந்து ஐரோப்பாவில் இரண்டாவது நாடாக பெல்ஜியத்திலும் பெண்கள் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகத்தை மூடிச் சென்றால் 197 டொலர் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
பெல்ஜியம் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்ட மூலத்திற்கு அமைவாக இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த சட்டத்திற்கு எதிராக முகத்தை மூடும் வகையில் பர்தா அணிந்த இரு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய மனித உரிமை ஆணையமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரான்ஸிலும் இந்த தடைச் சட்டம் அமுலில் உள்ளது.
Labels:
இஸ்லாமிய உலகம்
போக்குவரத்து முற்கொடுப்பனவு அட்டைகள்
(ஒலிந்தி ஜயசுந்தர)
பொதுமக்களின் போக்குவரத்து தொடர்பில் முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்காக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இந்த புதிய முறை 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை பற்றி பஸ் சங்கங்களுடனும் போக்குவரத்து நிறுவனங்களுடனும் பேசப்பட்ட போது அவர்கள் இது பற்றி மிக ஆர்வமாக இருந்ததாக போக்குவரத்து செயலாளர் விக்டர் சமரவீர தெரிவித்தார்.
பொதுமக்களின் போக்குவரத்து தொடர்பில் முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்காக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இந்த புதிய முறை 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை பற்றி பஸ் சங்கங்களுடனும் போக்குவரத்து நிறுவனங்களுடனும் பேசப்பட்ட போது அவர்கள் இது பற்றி மிக ஆர்வமாக இருந்ததாக போக்குவரத்து செயலாளர் விக்டர் சமரவீர தெரிவித்தார்.
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Posts (Atom)