Monday, November 21

இஸ்லாத்திற்கெதிரான சிங்கள பேஸ்புக் - ஒன்றுபட்டு எதிர்ப்போம்


පෙරමුණේ රාළගේ අටුවාව (பெரமுன ராள லாகே அடுவாவ) எனும் பெயரில் ஒரு face book Open Group இருக்கிறது (லிங்க் கடைசியில் தரப்பட்டுள்ளது) அதில் முஸ்லிம்களையும் நமது கலாச்சாரங்களைய்யும் கேலி செய்வதல்லாமல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களை கேலி செய்யும் காடூன்களையும் இட்டுள்ளான் (older post சென்று பார்க்கவும் ) ஆகவே இதை ரிப்போர்ட் செய்து பிளாக் பண்ணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் ஆகவே வாருங்கள் அனைவரும் சேர்ந்து இதை பிளாக் பண்ணுவோம்

முதலில் லிங்கை கிளிக் செய்யவும்


அந்தப்பக்கத்தில் கடைசியில் உள்ள Report Group என்பதனை கிளிக் செய்யவும்

பின்னர் வரும் சிறிய திரையில் Hate speech என்பதனை தெரிவு செய்து choose a type என்பதில்

targets a religious group என்பதனை தெரிவு செய்து continue tab பினை கிளிக் செய்யவும்

பின்னர் வரும் திரையில்
report to face book என்பதனை தெரிவு செய்து continue tab பிணை கிளிக்செய்துவிடவும்

http://www.facebook.com/groups/atuwawa/இங்கே கிளிக் செய்யவும்

நாங்களே உலக வல்லரசு, அதனை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்கிறது அமெரிக்கா


எக்காரணம் கொண்டும், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா விட்டுக் கொடுக்காது' என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமெரிக்காவின் புவியியல் முன்னுரிமைகளின்படி, பாதுகாப்புக்கு குந்தகம் நேரிடும்படியான செயல்களுக்கு, அமெரிக்கா ஒரு போதும் இடம் கொடுக்காது. பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது.

இந்நிலையில், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது.உலக நலன் மற்றும் உலகளாவிய பொறுப்புகளுடன் கூடிய ஒரு நாடு, உலகளாவிய நிலையில் வலுவான ராணுவம் கொண்ட ஒரு நாடு என்ற முறையில், அமெரிக்கா, உலக பாதுகாப்புக்காக தொடர்ந்து செயல்படும்.இவ்வாறு பனெட்டா தெரிவித்தார்.
sources-yarlmuslim

சிங்கள மக்கள் சுகபோகங்களை அனுபவிக்க நினைத்தால் ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வை எட்டமுடியாது!- பிரதமர் ஜயரட்ன

[ ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011,
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழர்களுக்கு குறைந்தளவு உரிமைகள், தீர்வுகள் வழங்கப்படுமாயின் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன். நீதியான ஒரு தீர்வு கிடைக்கப் பிரதமர் என்ற வகையில் பாடுபடுவேன் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள 214 இந்து ஆலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்கான நிதி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில், இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் தலைமையில் நடைபெற்றது.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டியைத் தயார்படுத்திக் கொள்ளவும்!-மேர்வின் சில்வா எச்சரிக்கை

நாட்டில் அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிட்டால் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய காலச் சூழலில் சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை எனவும் நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களை உருவாக்கி சில ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு எதிராகவும் சிலர் இவ்வாறான சேறு பூசல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வேண்டுதலின் பேரில் இணைய உள்ளடக்கத்தை கூகிள் அகற்றியது _


இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணைய உள்ளடக்கத்தை இலங்கையின் வேண்டுதலின் பேரில் கூகிள் நீக்கியுள்ளது. இப்படியான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டதாகவும், அதற்கு தாம் இணங்கியதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. வேறு தொழில்நுட்ப, தொடர்பாடல் நிறுவனங்களைப் போல், சிரமமாக இலங்கை அரசு காரியாலயங்களிலிருந்தும் உலகிலுள்ள நீதிமன்றங்களிலிருந்தும் தமது இணையத்திலிருந்து உள்ளடங்கங்களை நீக்குமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன. சில உள்ளடக்கங்கள் அவதூறு ஏற்படுத்துவதாகவும், சில உள்நாட்டு சட்டங்களை மீறுவதாகவும், சில பாலியல் மற்றும் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாலும் உள்ளடக்கங்கள் நீக்கப்படுகின்றன. நாட்டுக்கு நாடு இச்சட்ட விதிகள் வேறுபட்டு காணப்படுகின்றன. இலங்கை அரசின் கோரிக்கையின் பேரில் கூகிள் தமது உள்ளடக்கங்களை நீக்கினால், கூகிள் இலங்கை அரசியல் பிரசார பகுதிகளையும் நீக்க வேண்டுமெனவும், அவை தமிழர்களைப் பாதிப்பதாகவும் தமிழ் ஆர்வலர் ஒருவர்  கூறினார்.

கூட்டமைப்பு எம். பி உட்பட பலர் ஆளுந்தரப்புக்கு மாறுகின்றனராம்!


2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் ஆளுங்கட்சியில் இணையவுள்ளனர் என தகவல் வெளிவந்துளள்ன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லங்கா சீ நியூஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பாலானோரே அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என்றும் இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.அத்துடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவர்களில் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.

Sunday, November 20

ரணில் விக்கிரமசிங்க மீது பாலியல் குற்றச்சாட்டு – அதிருப்தி அணியினரால் குற்றப்பத்திரம் கையளிப்பு

[ Sunday, 20 November 2011, 08:27.45 AM. ]

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்த அகற்ற முனையும் அணியினரால், அவருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுதென்மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்த்தன இந்தக் குற்றப்பத்திரத்தை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

றோசி சேனநாயக்க, புத்திக பத்திரன, துனேஸ் கங்கந்த, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சந்திரா கங்கந்த, சிரால் லக்திலக, பந்துலால் பண்டாரிகொட, லக்ஸ்மன் லனறோல் மற்றும் பலர் இந்தக் குற்றப்பத்திரத்தில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது-டியுனீஸிய புதிய அரசாங்கம்- ஏமாந்து போனமுஸ்லிம் சமூகம்

 டியுனீஸிய அரசாங்கம் மதுபானத்தையோ, நாஸ்த்திகத்தையோ, ஓரினச் சேர்க்கையையோ தடை செய்யாது. இவற்றில் ஈடுபடுபவருக்கு தண்டனையும் வழங்காது: முஸலிம்களாகிய நாம் மார்க்கத்தை அலட்டிக் கொள்ளாத வர்களிடம் எதிர் பார்ப்பதை விட இஸ்லாமிய இயக்கம், இஸ்லாமியக் கட்சி, இஸ்லாமிய அரசாங்கம் என்ற பெயரோடு வருபவர்களிடம் பலவற்றை எதிர் பார்த்திருப்பது பழகிப் போன விடயம்.

அந்த வரிசையில் அன்மையில் ‘டியுனீஸியா’வில் ‘அன்னஹ்தா’ மறுமலர்ச்சி கட்சி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து ‘இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக பல விடயங்கள் நடக்கப் போகிறன’ என முஸ்லிம்களில் பலரும் எதிர்பார்த்தனர். நமது தமிழ் பேசும் முஸ்லிம் உலகமும் இது பற்றி எழுதவும் எதிர் பார்க்கவும் தவறவில்லை.

பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் மீது அரை நிர்வாண பகிடிவதை

போரதனைப் பல்கலைக்கழகத்தில் பெண் மாணவிகள் மீது அரை நிர்வாண பகிடி வதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன்போது முதலாம் ஆண்டு மாணவிகளை இரண்டாம் ஆண்டு சக மாணவிகள் இவ்வாறு பகிடி வதைக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் ஆண்டைச் சேர்ந்த பத்து மாணவிகளை இரண்டாம் ஆண்டு மாணவிகள் இவ்வாறு அரை நிர்வாணப்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

பலஸ்தீனுக்கு இந்தியா 51 கோடி ரூபா நிதியுதவி


பலஸ்தீனுக்கு 2011-12 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதியுதவியாக ரூ.51 கோடியை இந்தியா அளித்துள்ளது. இந்த நிதியுதவிக்கான காசோலையை "ஐக்கிய நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைப்பிடம்', இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ. அகமது வெள்ளிக்கிழமை அளித்தார். ஐ.நா. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைப்பின் ஆணையாளர் ஃபிலிப்போ கிராண்டியிடம் இக்காசோலை கையளிக்கப்பட்டது.