கொழும்பு - தெஹிவளை கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸா ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது .
குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது. பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்துள்ளது எனினும் போலீசார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் சிறிய மதரஸாவாக இயங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.