Wednesday, November 23

லிபியா இஹ்வானுல் முஸ்லிமின் தலைவராக உஷ்தாத் பஸீர் கிப்தி


புரட்சிக்குப் பிந்திய லிபியாவில் புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் லிபிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் தன்னை முழுமையாக தயார்படுத்திவருகின்றது.பெங்காசியில் தமது முதலாவது பகிரங்க மாநாட்டைக் கூட்டிய லிபிய இஹ்வான்கள் ஜமாஅத்தின் தலைவராக உஸ்தாத் பஷீர் கிப்தியை தெரிவு செய்துள்ள அதேநேரம் மஜ்லிஸுஷ் ஷுறாவுக்கான புதிய உறுப்பினர்களையும் தெரிவுசெய்துள்ளனர்.

எழுந்திருக்காததால் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு ஊழியர் மீது அமைச்சர் தாக்குதல்

 
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011,
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் வழமையான பிரமுகர்கள் வழியாக உட்சென்ற போது அங்கு முதலில் காணப்பட்ட பாதுகாப்பு ஊழியர் அமைச்சரைக் கண்டு ஆசனத்தை விட்டு எழுந்திருக்காமல் இருந்துள்ளார்.
இதன்போது அமைச்சர் அவரைப் பேசிவிட்டு தொடர்ந்து நடந்து செல்லும்போது அடுத்த இடத்தில் காணப்பட்ட பாதுகாப்பு ஊழியரும் எழுந்திராது ஆசனத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

அமைச்சரைக் கண்டு அவரும் எழுந்திருக்காததால் ஆத்திரமுற்ற அமைச்சர் அவரைத் தாக்கியதாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதலுக்கிலக்காகி காயமடைந்த பாதுகாப்பு ஊழியர் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் facebook account ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எவ்வாறு

நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஐ டி இல் போய் ஒரு அசிங்கமான சைட்டுடைய பக்கத்தை லைக் செய்தால் என்னவாகும் நிலைமை?

நமக்கு பிடித்தவாறு facebook ஐவடிவமைத்துக் கொள்ளலாம்

இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் தளமாகவும், மிகப்பெரிய சமூக தளமாகவும் Face Book மாறிவிட்டது. இப்பொழுது இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
தற்போது இந்தத்தளத்தினை நாளொன்றிற்கு 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உபயோகப் படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் முகப்புதகத்தின் பயன்பாட்டை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதன் தோற்றம் ஒரே மாதிரியாக இருப்பது தான் நம்மில் அநேகருக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றது.
இதை மாற்றும் வகையில் அந்த நிறுவனம் ப்ரொபைல் தீம்ஸை தற்போது அறிமுகபடுத்தி இருக்கிறது. அதன் மூலம் FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது. மேலும் அவை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது. அதனால் நாம் விரும்பும் வண்ணம் தீம்களை வடிவமைப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.

15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்: புது வித பற்றரி கண்டுபிடிப்பு

[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011,
வெறும் 15ம் நிமிடம் மட்டுமே சார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடிய கைபேசி பற்றரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறைந்த நேரம் சார்ஜ் செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய பற்றரி தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் பற்றரியை கண்டுபிடித்தனர்.

துருக்கி ஹாஜிகள் மீது சிரியாவில் தாக்குதல் - ஐவர் மரணம்


துருக்கியை சேர்ந்த முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் தங்களது புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு 9 பஸ்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். சிரியாவில் ஹோம்ஸ் நகரம் அருகே பாப்ஹலா பகுதியில் எல்லையை கடக்க முயன்றனர். அப்போது அங்கு சிவப்பு நிற காரில் ராணுவ வீரர்கள் வந்தனர்.

அவர்கள் துருக்கி ஹஜ் பயணிகள் வந்த பஸ்களின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் முன்னாள் சென்று கொண்டிருந்த 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு துருக்கி பிரதமர் ரீசெப் தயீப் என்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் சிரியா அதிபர் பஷார்-அல்- ஆசாத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், ராணுவத்தின் மூலம் தனது சொந்த மக்களை (முஸ்லிம்களை) கொன்று குவிக்கும் ஆசாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.மக்களின் போராட்டத்தை ராணுவத்தின் மூலம் அடக்க முடியாது. எனவே அவரது ஆட்சி தொடர்ந்து நீடிக்க முடியாது. அந்த நாள் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

எகிப்து இரண்டாம் கட்டம்: இடைக்கால அரசும் ராஜினாமா!

November 23, 2011
எகிப்தில் இரண்டாம் கட்டமாக இராணுவ அரசுக்கு எதிராக போராட்டக் களம் கண்டுள்ள பொதுமக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.


ஹோஸ்னி முபாரக் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக, இராணுவம் தலைமையில் இடைக்கால அரசு எகிப்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இராணுவத்துக்குத் தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கும் சில சட்டங்களை இடைக்கால அரசு நிறைவேற்றியது.

இலங்கை, மாலைதீவு, இந்தியா இணைத்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கத் திட்டம்


இலங்கை, மாலைதீவு, இந்தியா நாடுகளை இணைத்து பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கப்பல் சேவை எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென இலங்கைக்கான துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதன் பிரகாரம் முதலாவது கப்பல் சேவை மாலைத்தீவிற்கும், இலங்கைக்கும் இடையில் நடைபெறும்.

அண்மையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இப்படகு சேவை தொடர்பாக 3 நாடுகளும் அவதானம் செலுத்தியது.

உல்லாச பயணத்துறையை மட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையில் நட்புறவை கட்டியெழுப்புதற்கும் இந்த பயணிகள் கப்பல் சேவை பங்களிப்பு செய்யுமென துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

Tuesday, November 22

இலங்கையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்கட்டணம் அதிகரிப்பு

 



வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை அதிகரிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு, நிமிடம் ஒன்றுக்கு விதிக்கப்படும் வரி ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 2 ரூபா அறவிடப்பட்ட நிமிடம் ஒன்றுக்கான வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்கான வரி இனிமேல் 3 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது. இதன்மூலம் 2 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் பெற முடியும் என்று வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரானுக்கெதிரான புதிய தடைகள்

 

அணுத்திட்ட சர்ச்சைகள் காரணமாக ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை மேற்குலக நாடுகள் அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனாடா ஆகிய நாடுகள் இந்த தடைகளை விதித்துள்ளன.

ஈரான் மீது கணிசமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அனைத்து வங்கிகள் உடனான உறவுகளையும் துண்டிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளதுடன், பெற்றோலிய இராசாயனம், எண்ணெய் மற்றும் வாயு தொழிற்துறைகளுடன் தொடர்புடைய ஏற்றுமதிகளுக்கு கனடா தடைவிதித்துள்ளது.