பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் கேட்டிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
Tuesday, November 22
ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள்! முக்கிய அம்சங்களை பகிரங்கப்படுத்தியது ஆங்கில பத்திரிகை
Labels:
இலங்கை செய்திகள்
அரச ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு அல்ல சம்பள மேலதிகக் கொடுப்பனவுதான்
November 22, 2011 03:24 pm
2012ம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான 10 வீத சம்பள அதிகரிப்பு அவர்களின் சம்பள மேலதிக கொடுப்பனவாகவே வழங்கப்படும் என சர்வதேச நிதித் திட்டமிடல் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிரேஸ்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிரேஸ்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Labels:
இலங்கை செய்திகள்
TV இல் சொல்லப்பட்ட பட்ஜெட்டும் சொல்லப்படாத பட்ஜெட்டும் -
The documents received by Customs. See how duty imposed!!!!
2012 budget changes
2012 budget changes
| H.S. Code | Description | Special Commodity Levy |
| 0305.59.10 | Maldive fish and substitutes therefore | Rs. 250 per kg |
| 0305.59.90 | Other - Dried fish | Rs. 100 per kg |
| 0713.31.10 | Green gram (Moong) | Rs. 50 per kg |
| 0713.31.90 | Black gram | Rs. 100 per kg |
| 0713.39.10 | Cowpea | Rs. 100 per kg |
| 0805.10.10 | Orange - Fresh | Rs. 60 per kg |
| 0805.20.10 | Mandarins - Fresh | Rs. 35 per kg |
| 0806.10 | Grapes - Fresh | Rs. 120 per kg |
| 0808.10 | Apples - Fresh | Rs. 45 per kg |
| 0904.20.12 | Chillies-crushed or ground | Rs. 40 per kg |
| 0909.20.10 | seeds of coriander -neither crushed nor ground | Rs. 45 per kg |
| 0909.20.20 | Seed of corainder crushed or ground | Rs. 90 per kg |
| 0909.30 | Seed of Cumin | Rs. 150 per kg |
| 0909.50 | Seed of fennel | Rs. 50 per kg |
| 0910.30.10 | Turmeric neither crushed nor ground | Rs. 200 per kg |
| 0910.30.90 | Turmeric -Other | Rs. 300 per kg |
| 0910.99.10 | Mathe seed | Rs. 50 per kg |
| 1008.20.10 | Kurakkan (Eleusine coracana spp.) | Rs. 75 per kg |
| 1008.20.90 | Other / Millet | Rs. 75 per kg |
| 1102.90.20 | Kurakkan (Eleusine coracana spp.) flour | Rs. 150 per kg |
| 1106.10.10 | Black gram flour | Rs. 200 per kg |
| 1202.20 | Ground Nut - Shelled | Rd. 100 per kg |
| 1207.50 | Mustard seeds | Rs. 50 per kg |
Labels:
இலங்கை செய்திகள்
“மக்களை பாதுகாக்க மனித நேய குண்டுகள்” அமெரிக்கா 1000 BUNKER BUSTER குண்டுகளை UAE அரசிற்கு வழங்கவுள்ளது
மேற்படி குண்டுகளை இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்கா மீள் வடிவமைத்து அதன் வெடிப்பு சக்தியை இரு மடங்காக அதிகரித்துசுப்பர் பங்கர் பஸ்டர் எனபெயரிட்டது. பதுங்கு நிலைகள், சுரங்கங்கள், நிலத்தின் கீழ் செல்லும் குழாய்கள், போன்றவற்றை தகர்க்க வல்லது இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள். இரும்பு உருக்கு, கருங்கற்கள், சீமெந்து போன்றவற்றை சிலநொடிகளில்
சின்னாபின்னமாக்கவல்ல குண்டுகள் இவை.
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
அல்ஹைதாவின் கிறிஸ்தவ ஆதரவாளர் அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில், குண்டு வைக்க முயன்ற, அல்-குவைதா ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் குறிப்பிடுகையில், "டொமினிக்கன் குடியரசை சேர்ந்தவர் ஜோஸ் பிமென்டல்,27. அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் போது, அவர்கள் பயணிக்கும் வாகனத்தை, பைப் வெடிகுண்டு மூலம் தகர்க்க திட்டமிட்டிருந்தார்.
அல்-குவைதா ஆதரவாளரான ஜோஸ், கடந்த வாரம், நியூயார்க்கில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த போது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2009ம் ஆண்டு முதல், இவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இவர், பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என்றார்.
Labels:
இஸ்லாமிய உலகம்
Monday, November 21
லிபியாவில் இஹ்வான் முஸ்லிமின் பகிரங்க மாநாடு
வீழ்ச்சியடைந்த லிபிய ஆட்சியாளர் முஅம்மர் கடாபியின் காலத்தில் கடுமையான அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம், அதன் முதலாவது பகிரங்க மாநாட்டை நடத்தியுள்ளது.
சென்ற வியாழனன்று லிபியாவின் இரண்டாவது பெருநகரமான பெங்காசியில் தொடங்கிய இம்மாநாடு மூன்று நாட்களாக நடைபெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா லிபியக் குழுக்களையும் ஒன்றிணையுமாறு இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது.
Labels:
இஸ்லாமிய உலகம்
2012 வரவு செலவு திட்டம், சில முக்கிய துளிகள்
2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்பித்தார்.
எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.
தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,
எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.
தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,
Labels:
இலங்கை செய்திகள்
தபால் மாஅதிபரை பதவி நீக்க அமைச்சர் இணக்கம்: பணிப் பகிஷ்கரிப்பு முடிவு!
Monday, 21 November 2011
தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதாக தபால் தொலைத தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரங்க உறுதியளித்ததையடுத்து கடந்த எட்டு நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை தபால் திணைக்கள ஊழியர்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்க மீது ஊழல் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி, அவரை பதவி நீக்க வேண்டுமெனக் கோரி தபால் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர். இப்பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான தபால்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கியிருந்தன.
Labels:
இலங்கை செய்திகள்
க.பொ.த. உயர்தரத்தில் கொரியா மொழியும் சேர்ப்பு

கொரியாவிற்கு வேலை வாய்ப்பினை பெற்றுச் செல்ல முனையும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கொரிய மொழியையும் ஒரு பாடமாக உள்ளடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆங்கிலம் சீன ஜேர்மன் பிரெஞ் மற்றும் ஹந்தி மொழிகள் உயர்தர பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
மத்தியகிழக்கில் இஹ்வானுல் முஸ்லிம்களின் சாம்ராஜியம் - அஞ்சுகிறது இஸ்ரேல்

சிரிய அதிபர் பஷார் அஸதின் வீழ்ச்சி இஸ்ரேலை துடைத்தழிக்கும் ஒரு பேரனர்த்தத்தை உண்டாக்கும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சபைத் தலைவர் ஜெனரல் ஆமூஸ் கிலாட் எச்சரித்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவத்துக்கு சொந்தமான வானொலி சேவை செய்தி வெளியிட்டிருக்கிறது.
எகிப்து, ஜோர்தான் மற்றும் சிரியாவில் செயற்பட்டுவரும் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் தலைமையில் மத்திய கிழக்கில் உருவாகப் போகும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் விளைவாகவே இந்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
Subscribe to:
Posts (Atom)

