Thursday, January 31

இரத்தினபுரியில் இனவாத ஆர்ப்பாட்டம் : பிக்குகள் ஏற்பாடு ?


இனவாத பெளத்த பிக்குகள் எதிர்வரும் செவ்வாய் அன்று இரத்னபுரி நகரில் ஆர்பாட்டம் ஒன்றை நடார்தப்போவதாக பிராந்தியத்தில் தகவல்கள் பரிமாறக்கொள்ளப்படுகின்றன. இதைஒற்றி இரத்னபுரி நகரில் பதாதை ஒன்றும் தொங்கவிடப் பட்டிருப்பதாகவும் உறுதிசெய்யப் படாத தகவல்கள் கிடைத்திருப்பதோடு நாம் தொடர்பு கொண்ட பலரும் இது குறித்த விடயங்கள் ஊரில் கதைக்கப்பட்டு வருவதாகவும் இது வதந்தியா இல்லையா என்பது தெரியாது என்றும் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் வியாபார நிலைகளுக்கும் எதிராகத் தொடரும் பேரினவாத முன்னெடுப்புகள் அநுராதபுர, தம்புள்ளை, குருணாகலை பகுதிகளைத் தொடர்ந்து இரத்தினபுரியைக் குறி வைப்பதில் ஆச்சரியமில்லை என்பதால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் பிராந்திய அரசியல் வாதிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அசம்பாவிதங்களையும் பதற்றத்தையும் தணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையின முஸ்லிம்களைப் பாதுகாக்குமாறு சம உரிமை இயக்கம் கோரிக்கை


Socialist0
சிறுபான்மை இனத்திற்கெதிரா சில இனவாதிகளால் அரசின் அனுசரனையுடன் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், மக்களை விழிப்பூட்டும் வகையிலுமான துண்டுப்பிரசுரம் இன்று வியாழக்கிழமை (31.01.2013) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சம உரிமை இயக்கத்தினால் வினியோகிக்கப்பட்டது.


மோட்டார் சைக்கிள்களுக்கு AAB எழுத்துக்களைக் கொண்ட இலக்கத்தகடு


மோட்டார் சைக்கிள்களுக்கான மூன்று ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட வகுப்பிற்கான இலக்கத்தகடுகளை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பதிவு செய்யவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இந்த வகுப்புக்குரிய இலக்கத் தகடுகளை AAB என முதலில் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம்: மரண தண்டனை விதிக்க வேண்டும் :அமைச்சர் கரலியத்த







சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவு சம்பவங்களை இல்லாதொழிப்பதற்காக இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பொது மன்னிப்பு வழங்காது மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை போன்ற கொடிய தண்டனைகளை விதிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்துள்ளார்.

காலியில் தனியார் வங்கி இஸ்லாமிய பிரிவு மீது கல்வீச்சு தாக்குதல்



காலியில் அமைந்துள்ள வங்கியின் இஸ்லாமிய பிரிவு மீது சிலர் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வங்கியின் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிவே வங்கியின் இஸ்லாமிய பரிவு மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வங்கியின் பெயர் பலகையொன்றையும் குறித்த பகுதியிலிருந்து அகற்ற கடும்போக்கு பௌத்த சிங்கள இனவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது