Thursday, January 31

மோட்டார் சைக்கிள்களுக்கு AAB எழுத்துக்களைக் கொண்ட இலக்கத்தகடு


மோட்டார் சைக்கிள்களுக்கான மூன்று ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட வகுப்பிற்கான இலக்கத்தகடுகளை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பதிவு செய்யவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இந்த வகுப்புக்குரிய இலக்கத் தகடுகளை AAB என முதலில் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர கூறினார்.

முச்சக்கர வண்டிகளுக்காக ஏற்கனவே மூன்று எழுத்துக்களைக் கொண்ட வகுப்பிற்கான இலக்கத் தகடுகளை பதிவுசெய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கார்களுக்காகவும் இந்த வருட இறுத்திக்குள் மூன்று ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட வகுப்பிற்கான இலக்கத் தகடுகளை பதிவுசெய்வதற்கு எண்ணியுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார்.
கார்களுக்கான இரண்டு ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட வகுப்பின் கீழ் மேலும் 40 ஆயிரம் வரையான வாகனங்களை பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment