சிறுபான்மை இனத்திற்கெதிரா சில இனவாதிகளால் அரசின் அனுசரனையுடன் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், மக்களை விழிப்பூட்டும் வகையிலுமான துண்டுப்பிரசுரம் இன்று வியாழக்கிழமை (31.01.2013) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சம உரிமை இயக்கத்தினால் வினியோகிக்கப்பட்டது.
துண்டுப்பிரசுர வினியோகத்தில் நாட்டில் பலபாகங்களிலும் இருந்து வந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இத்துண்டுப்பிரசுரம் நாட்டின் ஏனைய பல பாகங்களிலும் வினியோகிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment