Saturday, July 20

மூன்று மாகாண: சபைகள் வாக்காளர்கள் உறுப்பினர்கள் விபரம்


voting எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ள வடமாகாணம்,மத்திய மாகாணம்,வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்ளில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் விபரம்,மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பன குறித்து தகவல்களை தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ளது.அதனது விபரங்கள் பின்வருமாறு -
வடமாகாணம்
மாவட்டம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
யாழ்ப்பாணம்       426703            19             16
கிளிநொச்சி        68589            07             04
மன்னார்        72420            08             05
வவுனியா        94367            09             06
முல்லைத்தீவு        52409            08             05
மொத்தம்

            36
 வடமேல் மாகாணம்
மாவட்டம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
குருநாகல்      1227810           37           34
புத்தளம்       526408           19           16
மொத்தம்

          50
 மத்திய மாகாணம்
மாவட்டம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வேட்பு மனு அளிக்கப்படக் கூடிய அபேட்சகர் எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
கண்டி        1015315           32              29
மாத்தளை         366549           14              11
நுவெரலியா         507693           19              16
மொத்தம்

             56

வட தேர்தல் தொடர்பாக மு. காவுக்குள் குழப்பம்!


எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையா, தமிழ் தேசிய கூட்டமைப்பையா ஆதரிப்பது? என்கிற தீர்மானத்துக்கு வர முடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய தடுமாற்றத்தில் உள்ளது.
அரசைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப்தீன் கருத்துக் கூறுகையில் கிழக்கு மாகாண சபை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸை அரசு ஏமாற்றி வருகின்றது, எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை வட தேர்தலில் ஆதரிப்பதன் மூலம் சிறுபான்மை மக்களின் பலத்தை மு. கா அரசுக்கு காட்டும் என்றார். மு. காவுடன் கூட்டுச் சேர்ந்து வடக்கில் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என்று கூறினார்.
ஆனால் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவிக்கையில் அரசில் பங்காளியாக மு. கா உள்ளது, அப்படி இருக்கின்றபோது அரசை ஆதரிப்பதை தவிர மு. காவுக்கு வேறு மார்க்கம் கிடையாது என்றார்.

Friday, July 19

இராணுவ நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட அதிபர் முர்ஷி அதிகாரிகளை பார்த்து…



mursi இராணுவ நீதி மன்றத்தில் அதிபர் முர்ஷி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனைகள் நேற்று ஆரம்பமாகிய பொழுது விசாரணை நடத்தியவர்களைப் பார்த்து : இன்ஷா அல்லாஹ் நாளை இறுதித் தீர்ப்பு நாளில் உங்கள் மீதும் விசாரனைகள் இடம் பெறும் அப்பொழுது அல்லாஹ் கேட்பான் ” அக்கிரமம் அநீதி என்று தெரிந்தும் எனது அடியான் முஹம்மது முர்ஷியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்”, நிச்சயமாக அநீதி இழைக்கப் பட்டவனது மன்றாட்டத்திற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை கிடையாது என்று ஜனாதிபதி முர்ஷி கூறிய பொழுது விசாரணை நடாத்திய அதிகாரிகளில் சிலர் அழுது விட்டனராம்.
ننفرد بنشر بعض الحقائق حول الرئيس المعزول محمد مرسي من بينها ، أنه موجود علي ذمة النيابة العسكرية ، وبدأ التحقيق معه أمس في عدد من القضايا منها التخابر و الهروب من سجن وادي النطرون ، ولكن الجديد اليوم هو أن الرئيس المعزول أثناء التحقيق معه قال للنيابة العسكرية ” سيسئلكم الله يوم الدين أنكم وضعتم العبد محمد مرسي في وضع المتهم وأنتم علي يقين أنه ظلم ، ودعوة المظلوم ليس بينها وبين الله حجاب ” ، فأبكت تلك الجملة بعض أفراد هيئة النيابة العسكرية ، علي حد قول المصادر
அதேவேளை இராணுவத்திற்குள் இருக்கின்ற பல்வேறு கட்டமைப்புக்கள் தற்பொழுது இராணுவ சதி முயற்சியை அரங்கேற்றிய அப்துல் பத்தாஹ் ஸீ ஸீ யுடன் முரண்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை மிக விரைவில் நல்ல தொரு செய்தியை எதிர்பார்க்குமாறும் ராபியத்துல் அதவிய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சூழவுள்ள 22 குடும்பங்களை 7 நட்களுக்குள் வெளியேற உத்தரவு

Revolving-news-Flashதம்புள்ளை பள்ளிவாசலையைச் சூழவுள்ள 22 குடும்பங்களையும் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று வெள்ளிக்கிழமை (19.07.2013) கடிதம் அனுப்பியுள்ளதாக கிராமவாசி ஒருவர் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 60 பேர்ச் காணி மற்றும் வீட்டைக் கொண்ட வை.எம். சலீம் என்பவருக்கு 9750 ரூபா நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு வருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு 7 நாட்களுக்குள் வெளியேறாதபோது அப்பிரதேசத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தம்புள்ளைப் பள்ளிவாயல் குறித்து கேட்டபோது, பள்ளிவாசலுக்கு எவ்விதக் கடிதமும் இதுவரை வரவில்லை. ஏனெனில், அவர்கள் இதனை ஒரு பள்ளிவாயலாக ஏற்றுக் கொள்ளவில்லையாம் எனவும் தெரிவித்தார்.

ஆனால், இப்பள்ளிவாசல் 1960 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருவதாகவும், 1990 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசலுக்கான மின்சார கட்டணப் பட்டியல் வருவதோடு, 2002 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசல் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் பதியப்பட்டு இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, உரியவர்கள் இது குறித்து உடனடியாக கவனமெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

SLMC + EPDP + UPFA = வட மாகாணசைபைத் தேர்தல்களம் -சுசில் பிரேமஜெயந்த

SLMC + EPDP + UPFA =  வட மாகாணசைபைத் தேர்தல்களம் - தனித்து போட்டியிடும் வீரவசனங்கள் காற்றில்

ஆளும் தரப்பின் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும்  இணைத்து வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அமைச்சரும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொது செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்தில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இத்தகவலை வெளியிட்டிருந்தார். 
இதன் மூலம் தனித்துப்போட்டியிடுவது தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ்  மற்றும் ஈபிடிபி வட்டாரங்களிடையே நிலவி வந்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இதனிடையே இன்றைய கூட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
 

மஹியங்கனை பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகையை தடுத்து நிறுத்தியதற்கு ரவூப் ஹக்கீம் வழமைபோல் கண்டிக்கிறாராம்

hakeem-slmc
மஹியங்கனை பள்ளிவாசலில் வழமையாக நடந்து வரும் ஜூம்ஆ தொழுகையை புனித ரமழான் மாதத்தில், இந்த வெள்ளிக்கிழமை அங்கு நடாத்தக் கூடாதென்று ஊவா மாகாண அமைச்சரான அனுரவிதாரன கமகே தடுத்து நிறுத்தியிருப்பதையும், பௌத்த தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான பொதுபலசேனாவின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர் அப்பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டிவிட்டிருப்பதையும் இன ஐக்கியத்தையும், நாட்டில் சமாதானத்தையும் விரும்பும் நேர்மையாகச் சிந்திக்கும் பௌத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (19) மஹியங்கனை பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திற்குச் சென்று பிரஸ்தாப மாகாண அமைச்சர், பள்ளிவாசல் ஸ்தாபக தர்மகர்த்தா சீனி முஹம்மது ஹாஜியாரின் மகன் சப்ரியிடம் பள்ளிவாசலில் தொழுகை நடத்தக் கூடாதென்றும், அதனை மூடிவிடுமாறும் எச்சரித்துள்ளதாகவும்,  அதன் காரணமாக அங்கு ஜூம்ஆத் தொழுகை நடைபெறவில்லையென்றும், இது     முஸ்லிம்களை மனவேதனையடைச்செய்யும் செயலென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

மு.கா.வினால் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்ட யெஹியா ஆளும் கட்சியில்

yehyaபுத்தளம் மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யெஹியா ஆப்தீன் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாகத் தெரிய வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடை நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கத்துவம் வழங்கப்பட்ட யெஹியா ஆப்தீன் ஐ.ம.சு கூட்டமைப்பு முக்கியஸ்தர்களைச் சந்தித்து கூட்டமைப்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் நவமணிக்குத் தெரிவித்தார்.

அமைச்சர் அநுரவிதானகேயினால் பதுளை மஹியங்களைப் பள்ளிவாசலில் ஜூம்ஆ நிறுத்தம்

பதுளை மஹியங்களை பள்ளிவாசலுக்கு இன்று வெள்ளிக்கிழமை, 19 ஆம் திகதி வருகை தந்துள்ள ஊவா மாகாண காணி அமைச்சர் அநுர விதானகே, மஹியங்களை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளையே தொழுதால் பிரச்சினை ஏற்படுமென கூறிச் சென்றுள்ளார். இதனால் அந்த பள்ளிவாசல் உடனடியாக மூடப்பட்டு, அங்கு நடைபெறவிருந்த ஜும்ஆவும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது

Thursday, July 18

ஹெம்மாதகமயில் பதட்டம் மூவர் மீது கடும் தாக்குதல்


10ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த மொஹமட் ஹம்ஷா, பௌமி   மற்றும் அவர்களின் ஹட்டன்  பகுதியை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் பலத்கமுவ  கிராமத்தில் வைத்து சிங்கள பெளத்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு மாவனல்லை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில்  ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹெம்மாதகம  பிரதேசத்தை சேர்ந்த  அமைச்சர் அதாவுட  செனிவரட்டனவின்   இணைப்பாளர்   மொஹமட் றியாசிடம்  வினவியபோது அவர் தெரிவித்த தகவல்கள் இங்கு தருகிறோம்

Wednesday, July 17

அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் : ஜாதிக ஹெல உறுமய


விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆவார். இந்தியா உட்பட சர்வதேசத்துடன் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் வலுவிழக்கச் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அனைத்து பெளத்த மக்களும் நாமும் உள்ளோம். ஆனால் தற்போது காணப்படுகின்ற சூழலானது பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பும் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,