ஆளும் தரப்பின் ஜக்கிய மக்கள்
சுதந்திரக்கூட்டமைப்பில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய
கட்சிகளையும் இணைத்து வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக
அமைச்சரும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொது செயலாளருமான சுசில்
பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சுதந்திரக்கட்சியின்
யாழ்.அலுவலகத்தில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான
சந்திப்பில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இத்தகவலை
வெளியிட்டிருந்தார்.
இதன் மூலம் தனித்துப்போட்டியிடுவது
தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஈபிடிபி வட்டாரங்களிடையே நிலவி வந்த
ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இதனிடையே இன்றைய கூட்டத்தில் ஜக்கிய
மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்
பலரும் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குடாநாட்டின் பல
பகுதிகளிலிருந்தும் அழைத்து செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான கட்சி
ஆதரவாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
No comments:
Post a Comment