தெற்கு கடுகதி வீதியில் பயணிகள் போக்குவரத்துக்காக இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது மேலும் இரு வாரங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச தெரிவிக்கின்றது. இ.போ.ச தலைவர் எம்.சி. பந்துசேன தகவல் தருகையில், இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்படுவதனால், இச்சேவை தாமதமடைந்துள்ளது.Wednesday, November 30
கடுகதி வீதியில் பஸ் சேவை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு. இதுவரை 36 விபத்துக்கள்!
தெற்கு கடுகதி வீதியில் பயணிகள் போக்குவரத்துக்காக இ.போ.ச பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது மேலும் இரு வாரங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச தெரிவிக்கின்றது. இ.போ.ச தலைவர் எம்.சி. பந்துசேன தகவல் தருகையில், இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள சொகுசு பஸ் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்படுவதனால், இச்சேவை தாமதமடைந்துள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலை - விமல் வீரவன்சவுக்கு பிடிக்கவில்லையாம்
நாட்டின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் n;தாடர்பில் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவரான விமல்வீரவன்ச, நெடுஞ்சாலை குறித்து வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொள்ளாது அமைக்கப்படடுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் கெப்பட்டிபொலவின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
அனைத்து ரயில் நிலையங்களிலும் மும்மொழி அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இலங்கையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் போக்குவரத்து தொடர்பான தகவல்களை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறிவிக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
சில ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்துக்கள் குறித்து மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அரச மொழிக் கொள்கை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்துக்கள் குறித்து மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அரச மொழிக் கொள்கை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!
வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
Labels:
இலங்கை செய்திகள்,
உலக செய்திகள்
உலகின் முதலாவது பாலியற் கல்லூரி - உலகம் எங்கே போகிறது
![]() |
| தலைமை ஆசிரியை மரியா |
உலகின் முதலாவது சர்வதேச 'செக்ஸ்' பாடசாலை வியன்னாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களான காதலர்கள் எப்படி சிறந்த காதலர்களாக இருக்கவேண்டும் என்று கற்பித்துக் கொடுக்கின்றனர் (வாய்க்குள் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாவர்களுக்கு படித்துக் கொடுக்கிறார்களாம்). வியன்னாவில் உள்ள இந்த சர்வதேச செக்ஸ் பாடசாலையில் மாணவர்களிடமிருந்து £ 1,400 தொகையை அறவிடுகிறார்களாம்.
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்,
சுவாரஷ்யமானவை
ஈரான் மாணவர்கள் பிரிட்டன் தூதரகத்தை கைப்பற்றினர்
ஈரான்நாட்டு பல்கலைமாணவர்கள் இங்கிலாந்து அரசை கண்டித்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பது குறித்து இங்கிலாந்து அரசு கருத்து ஒன்றை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் நாட்டு பல்கலை மாணவர்கள் ஈரான் அரசு இங்கிலாந்து நாட்டு தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறச்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான வாசகங்களை கூறியபடி பேரணியாக சென்ற பல்கலை மாணவர்கள் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். பி்னனர் அங்கிருந்த பாதுகாவலர்கள்மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் கொடியை தீ வைத்து கொளுத்தினர்.
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
முல்லைத்தீவில் இறப்பர் பயிர்ச்செய்கை
வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் இறப்பர் செய்கை பண்ணுவதற்குரிய சாத்தியக் கூறு கள் அதிகளவு இருப்பதை உறுதி செய்துள்ளதால் முதற்கட்டமாக முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மூன்று ஏக்கரில் இறப்பர் பயரிடப்படவுள்ளதாக பெருந்தோட்டத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மீளக்குடியேறும் மக்களுக்கு நிரந்தர வருவாயை பெற்றுக்கொடுக்கும் ஒரு திட்டமாக வடபகுதிக்குரிய பாரம்பரிய பயிர்ச்செய்கையுடன் இறப்பர் பயிர்ச் செய்கையையும் மேற்கொள்ளக்கூடிய விதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Labels:
இலங்கை செய்திகள்
Friday, November 25
லண்டனில் பிரமாண்டமாய் அமைக்க படும் மாவீரர் துயிலுமில்லம் -அதை காண மக்கள் குதுகலம் .. ! -
- Details
- Published on Friday, 25 November 2011 01:56
- Hits: 25
பிரித்தானியாவில் இதுவரை இடம்பெற்றிராத வரலாற்று சிறப்பு மிகு மாவீரர் மண்டபம் அமைக்க பட்டு வருகின்றது . தடவையில் நிற்க கூடிய வகையிலான மண்டபமும் ..அத்துடன் ஐயாயிரம் வாகனம்கள் நிறுத்தவல்ல வாகன தரிப்பிடமும் அமைக்க பட்டு வருகின்றன .
அத்துடன் சிறப்பு அம்சமாக தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறான மாதிரி துயிலும் இல்லங்கள் பிரமாண்டமாய் அமைக்க பட்டு வருகின்றன .
இவை இதுவரை பிரித்தானியாவில்நிகழ்ந்திராத வகையிலும் தாயகத்தில் இடம் பெற்ற மாவீரர் நிகழ்வுகள் போல இவை இருக்கும் என அந்த மண்டபங்களை அமைத்துவருபவர்கள் தெரிவித்துள்ளனர் .
Labels:
இலங்கை செய்திகள்,
உலக செய்திகள்
டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!
Labels:
இலங்கை செய்திகள்
சரத் பொன்சேகா உண்ணாவிரதத்துக்கு முஸ்தீபு - சிறைத்தண்டனை அளித்த நீதிபதிக்கு பதவியுயர்வு
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு தயாராகி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.
தனது நோய்க்குச் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை சிறைச்சாலை நிர்வாகம் மறுத்துள்ளமையைக் கண்டித்தே அவர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். நேற்று தொடக்கம் அவர் உண்ணாவிரதத்தில் குதிக்க முடிவு செய்திருந்தபோதும், சிறைச்சாலை அதிகாரிகளின் வேண்டுகோள் காரணமாக அதனைப் பின்போட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Comments (Atom)



