Monday, January 28

பிரதியமைச்சு பதவி பெற காத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ஏமாற்றம்




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவிகளை பெறுவதற்காக காத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பங்காளி கட்சியான தமக்கு சில பிரதியமைச்சு பதவிகளை அரசாங்கம் வழங்குமென முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் காத்திருந்தனர். கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு விதித்த நிபந்தனைகளில் பிரதியமைச்சு விவகாரமும் ஒன்றாகும்.

இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தொலைபேசி மூலமாக எமது இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் வருமாறு,

பிரதியமைச்சு பதவிகள்  பெறுவதற்காக சில முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஓடி அலைந்தமை உண்மையாகும். அவர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர். தலைவர் ரவூப் ஹக்கீம் தற்போது இந்தியாவில் உள்ளார். அவர் இன்று மாலைதான் நாடு திரும்பவுள்ளார். அவருக்கு தெரியாமலேயே அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய அமைச்சரவை









புதிய அமைச்சர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகேயும் தொழில்நுட்ப அமைச்சராக சம்பிக்க ரணவக்கவும் விளையாட்டு துறை அமைச்சராக டிலான் பெரேராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுப்பவர்களை கைதுசெய்ய நடவடிக்கை!

கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியரை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகார சபை இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களிடமிருந்து குழந்தைகளைப் பெற்று சிறுவர் பராமரிப்பு இல்லங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே போராடுகிறோம்; ஜனாதிபதியிடம் பொதுபல சேனா விளக்கம்!


01(764)
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக நாம் போராடவில்லை. பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்று பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனியார் பஸ் வண்டிகளில் வியாபாரம் மற்றும் யாசகம் செய்வது தடை

as_2எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ் வண்டிகளில் யாசகம் செய்வது மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்படவுள்ளது.
யாசகர்களையும், வியாபாரிகளையும் பஸ் வண்டிகளில் அனுமதிப்பதில்லையென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினர் பஸ் பயணிகளிடம் பணம் அறவிடுகின்றமை, பஸ் வண்டிக்குள் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பஸ் வண்டிகளில் யாசகம் செய்வோருக்கும், வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த அரசின் ஆட்சியில் மட்டும் ஏன் புத்த சாசன அமைச்சரின் கீழ் சிறுபான்மை மதங்கள் ?


மஹிந்த அரசின் ஆட்சியில் மட்டும் ஏன் புத்த சாசன அமைச்சரின் கீழ் சிறுபான்மை மதங்கள் ? இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் புத்த சாசனத்துக்குப் பொறுப்பான அமைச்சரே பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பௌத்த மத விவகாரங்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களின் மதங்களான இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்களின் விவகாரங்களுக்கும் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார்.

தற்போது நாட்டின் பிரதமரான டி.எம். ஜயரத்னவே புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக பதவி வகிக்கின்றார்.