கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியரை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகார சபை இது தொடர்பாக துரித நடவடிக்கை
எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களிடமிருந்து குழந்தைகளைப் பெற்று சிறுவர்
பராமரிப்பு இல்லங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சிலர் குழந்தைகள், சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை
ஒரு தொழிலாகக் கொண்டுள்ளனர். சிலர் குழந்தைக்கு மயக்க மருந்தை ஊட்டி
பரிதாபகரமாகக் காண்பித்து பிச்சை எடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு
ஏற்படும் துன்புறுத்தல்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் மா அதிபர் விசேட
சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இவர்கள் உடனடியாக கைது செய்யப்படவுள்ளார்கள். குழந்தைகளை
சுமந்தவாறோ, சிறுவர் சிறுமியரை அழைத்துக்கொண்டோ பிச்சை எடுப்பவர்களைக்
கண்டால் 1929 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி அனோமா
திசாநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment