எதிர்வரும்
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ் வண்டிகளில் யாசகம் செய்வது
மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்படவுள்ளது.
யாசகர்களையும், வியாபாரிகளையும் பஸ்
வண்டிகளில் அனுமதிப்பதில்லையென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்
தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினர் பஸ் பயணிகளிடம் பணம்
அறவிடுகின்றமை, பஸ் வண்டிக்குள் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பில்
எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பஸ் வண்டிகளில் யாசகம் செய்வோருக்கும்,
வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment