Saturday, June 4

சேதமடைந்து போன கோப்புக்களை மீட்டெடுப்பதற்கு



[ சனிக்கிழமை, 04 யூன் 2011, 04:18.56 மு.ப GMT ]
சில முக்கியமான கோப்புகளை மிகவும் கவனமாக பாதுகாப்போடு வைத்திருப்போம். சில நேரங்களில் அந்த கோப்புகள் பழுதடைந்து விடும்.அவ்வாறு பழுதடைந்த கோப்புகளை மீட்டெடுப்பது என்றால் சாதாரண விடயம் அல்ல. அலுவல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போர்ட்டபிள் டிவைஸ் பென்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வோம்.
இவ்வாறு கோப்புகளை இடமாற்றம் செய்யும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சேதமடையும் கோப்புகளை மீட்டெடுக்க File Repair என்னும் மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் எந்த கோப்பினை மீட்டெடுக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
பின் Start Repair என்னும் பொத்தானை அழுத்தி இழந்த கோப்பினை மீண்டும் பெற முடியும். இந்த மென்பொருளின் மூலமாக சேதமடைந்த பல்வேறு போர்மட்டுடைய கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.
தரவிறக்க சுட்டி

வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம் சனல் 4 இன் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம்!



வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம் சனல் 4 இன் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம்!

  இன்றைய தினம் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4 அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது

சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இன்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.

பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.



இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து விரைந்து சென்றது காணக்கூடியதாக இருந்தது.

செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.





சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.



அத்துடன் யுத்தத்தின் இறுதி நேரத்தில் தமிழ்ப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும் இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.

"இலங்கையின் கொலைக்களங்கள்" மனித உரிமை கவுன்ஸிலில் வெளியீடு


June 3, 2011  10:32 pm
இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய திரைப்படம் ஒன்று, ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் திரையிடப்பட்டுள்ளதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

"இலங்கையின் கொலைக்களங்கள்" என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் அரச படைகள் தமிழ்க் கைதிகளை சுட்டுக்கொல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இருப்பதாக பீபீசி ஜெனிவா செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்த காட்சிகள் போர்க்குற்றங்கள் மற்றும் மானுட குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரமாக இருப்பதாக இந்தப் படத்தை தயாரித்தவர்களும், மனித உரிமை அமைப்புகளும் கூறுவதாகவும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஐ.நா மன்றம் விசாரிக்கவேண்டும் என்று கூறுவதாகவும் பீபீசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வீடியோ காட்சிகளும் போலியானவை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

Thursday, June 2

தலைமைத்துவ பயிற்சிக்கு எதிரான மனு தள்ளுபடி



(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்களுக்கு, இராணுவ முகாம்களில் வைத்து கட்டாயமாக, வதிவிட பயிற்சி வழங்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் குழாமில் பிரதம நீதிபதி ஷிரானி ஏ.பண்டாரநாயக்கா, நீதிபதிகள் என்.ஜி.அமரதுங்க, கே.ஸ்ரீபவன் ஆகியோர்  இருந்தனர்.

மலேசியாவில் தற்போது விற்பனையாகும் ஹலால் பீரை முஸ்லீம் மக்கள் அருந்துவதை உடன் நிறுத்துமாறு மலேசிய அரசு அறிவிப்பு


  on Thursday, June 2, 2011

மலேசியாவில் தற்போது விற்பனையாகும் ஹலால் பீரை முஸ்லீம் மக்கள் அருந்துவதை உடன் நிறுத்துமாறு மலேசிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பானம்இ 'ஹலால் முறைப்படி தயாரிக்கப்பட்ட பீர்' என்ற விளம்பரத்துடன் அங்கு விற்பனையாகின்றது.

தேசிய பத்வா குழுவின்படி உணவிலும் பாணத்திலும் அனுமதித்துள்ள ஆல்கஹால் அளவை விட அதிக சதவிகிதம் இருக்கிறது என்று மலேசிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் இலாகாக்களை கவனிக்கும் அமைச்சர் டேடுக் ஜமீல் பகாரம்இ ஹலால் பீர் பற்றிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனம்இ இந்த பீரில் 0.01மூ ஆல்கஹால் இருப்பதாக விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. ஆனால் மலேசியாவில் விற்பனையாகும் ஹலால் பீரை பரிசோதனக்கு உட்படுத்திய போதுஇ அதில் 0.5மூ ஆல்கஹால் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தி இலாகா (ஜேக்கிம்)இ மிக விரைவில் மலேசியாவில் விற்பனையாகும் ஹலால் பீரைத் தடை செய்யவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டதாகவே இறுதித்தீர்வு திட்டம் - அரியநேத்திரன்

முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டதாகவே இறுதித்தீர்வு திட்டம் - அரியநேத்திரன்
June 2, 2011  09:41 am
Bookmark and Share
அரசாங்கத்துடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தீர்க்கமான தீர்வுகள் கிடைக்கும்போது முஸ்லிம் மக்களையும் இணைத்துக்கொண்டதாகவே இருக்கும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டதாகவே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Wednesday, June 1

பொலிஸ் மா அதிபர் ராஜினாமா-தற்போதைய செய்தி



பொலிஸ் மா  அதிபர் மஹிந்த பாலசூரிய அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் இன்று  கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 18 ஆம் திகதி அவரின் ஓய்வுபெறும் நாள் வரும்வரை உடனடி விடுமுறையில் செல்லவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு!



கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்
source:  http://tamil.news.lk/index.php?option=com_content&view=article&id=12569:2011-04-11-04-18-40&catid=35:latest-news&Itemid=385

சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது 31/05/2011

சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஆசிய நாட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து சவூதியின் அல் வதான் செய்தித்தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், சவூதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

அடுத்த மாதத்தில் இரண்டு சூரிய கிரகணங்கள்- ஒரு சந்திர கிரகணம்!


  Tuesday, May 31, 2011

ஏதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் ஜூலை 1ஆம் திகதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும்- ஒன்று சந்திர கிரகணமாகும்.
இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இலங்கையிலும் இந்தியாவிலும் தெரியாது. சந்திர கிரகணத்தை மட்டுமே  பார்க்க முடியும்.

ஜூன் 2ஆம் திகதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.55 மணி முதல் அதிகாலை 4.37 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதை சீனா- சைபீரியா- கிழக்கு ஆசிய நாடுகளில் காண முடியும்.
ஜூன் 15ஆம் திகதி இரவு 11.52 மணி முதல் அதிகாலை 3.33 மணி வரை சந்திக கிரகணம் ஏற்படும். இதை இலங்கையிலும் இந்தியாவிலும்-ஆசியா- வளைகுடா நாடுகள்- ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா- ஐரோப்பா- தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காண முடியும்.
ஜூலை 1ஆம் திகதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.48 மணி வரை அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும்- அண்டார்டிகா பகுதியிலும்இ மடகாஸ்கரிலும் காணலாம். ஆனால்- இலங்கையிலும் இந்தியாவிலும் இது தெரியாது.
இந்த மூன்று கிரகணங்களுமே வட அமெரிக்காவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.