[ சனிக்கிழமை, 04 யூன் 2011, 04:18.56 மு.ப GMT ] |
சில முக்கியமான கோப்புகளை மிகவும் கவனமாக பாதுகாப்போடு வைத்திருப்போம். சில நேரங்களில் அந்த கோப்புகள் பழுதடைந்து விடும்.அவ்வாறு பழுதடைந்த கோப்புகளை மீட்டெடுப்பது என்றால் சாதாரண விடயம் அல்ல. அலுவல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போர்ட்டபிள் டிவைஸ் பென்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வோம். இவ்வாறு கோப்புகளை இடமாற்றம் செய்யும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சேதமடையும் கோப்புகளை மீட்டெடுக்க File Repair என்னும் மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் எந்த கோப்பினை மீட்டெடுக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். பின் Start Repair என்னும் பொத்தானை அழுத்தி இழந்த கோப்பினை மீண்டும் பெற முடியும். இந்த மென்பொருளின் மூலமாக சேதமடைந்த பல்வேறு போர்மட்டுடைய கோப்புகளை மீட்டெடுக்க முடியும். தரவிறக்க சுட்டி |
Saturday, June 4
சேதமடைந்து போன கோப்புக்களை மீட்டெடுப்பதற்கு
Labels:
கணணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment