Saturday, June 4

"இலங்கையின் கொலைக்களங்கள்" மனித உரிமை கவுன்ஸிலில் வெளியீடு


June 3, 2011  10:32 pm
இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய திரைப்படம் ஒன்று, ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் திரையிடப்பட்டுள்ளதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

"இலங்கையின் கொலைக்களங்கள்" என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் அரச படைகள் தமிழ்க் கைதிகளை சுட்டுக்கொல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இருப்பதாக பீபீசி ஜெனிவா செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்த காட்சிகள் போர்க்குற்றங்கள் மற்றும் மானுட குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரமாக இருப்பதாக இந்தப் படத்தை தயாரித்தவர்களும், மனித உரிமை அமைப்புகளும் கூறுவதாகவும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஐ.நா மன்றம் விசாரிக்கவேண்டும் என்று கூறுவதாகவும் பீபீசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வீடியோ காட்சிகளும் போலியானவை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment