Tuesday, June 18

ஹெல உறுமயவின் திருத்தத்தை ரங்க பண்டார வழிமொழிந்தார்





அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை முற்றாக இரத்து செய்யும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய 21 ஆவது திருத்தத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார வழிமொழிந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரான வண. அதுரலிய ரத்ன தேரரே இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.

தனிநபர் பிரேரணையாகவே இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க எம்.பியான பாலித்த ரங்க பண்டார முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment