கிண்ணியாவில்
பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் இடம்பெற்றதையடுத்து பதற்ற நிலை
தோன்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வண்டில்களில் விறகு ஏற்றிவருவோரின்
அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவர்களை
இடைநிறுத்தி தடுத்துவைத்ததை அடுத்து படையினருக்கும் பொலிசாருக்கும் முறுகல்
தோன்றி மோதலாக மாறியதாக அறியக்கிடைக்கிறது.
தற்போது அங்கு பெரும் எண்ணிக்கையான
படையினர் (ராணுவத்தினர், கடற்படை உட்பட) குவிக்கப்பட்டுள்ளதாகவும்,
வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும், சிலர் காயமுற்றிருப்பதாகவும் தகவல்கள்
கிடைக்கின்றன எனினும் இவற்றை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.
இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் கிடைக்குமிடத்து உடன் பதிவேற்றப்படும்.
No comments:
Post a Comment