Wednesday, June 5

மாகாண சபை முறையில் புதிய மாற்றம் கொண்டுவர அரசாங்கம் முனைப்பு


lankamapமாகாண சபைகள் ஒன்றிணைக்கப்படுவதற்கு உள்ள வாய்ப்புக்களை தவிர்ப்பது தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அரசாங்க கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாண சபையுடன் தொடர்புபட்டு புதிய திட்டங்களை கொண்டுவரும் போது அதற்கு அனைத்து மாகாண சபைகளிலும் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு அதனை நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிக மாகாண சபைகளின் ஆதரவு கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
அதன்படி முன்னேற்பாடுகள் அவசர சட்டமூலமாக இவ்விடயத்தை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு அது நாளை 6ம் திகதி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.-அத தெரண

No comments:

Post a Comment